பக்கம்:பாலும் பாவையும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அகல்யா அவனைப் பயமுறுததினாள் அதேமாதிரி, நீ அழுதால் நான் சிரித்துவிடுவேன்!” என்று கனகலிங்கமும் அவளைப் பயமுறுத்தினான். - “ரொம்ப அழகாய்த்தானிருக்கிறது!- நடக்கவேண்டிய காரியத்தைப் பற்றிக் கொஞ்சமாவது யோசிக்காமல் வேறு என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறீர்களே?” என்றாள் அவள். 'என்ன காரியம் நடக்க வேண்டும்?” என்று அவன் திருப்பிக்கேட்டான். 'வீட்டுக்கு நாலு பாத்திரங்கள் வாங்கிப் போட்டால் ந்ான் சமைக்க மாட்ட்ேன்ா? அதனால் செலவும் குறையாதா?’ என்று அதற்குள் உரிம்ை .ெ கா ன் டி .டி ன it ன் அவள். "யார் இல்லை என்கிறார்கள்?-ஆனால் பாத்திரக் கடைக்கின்ரன் அப்ப்ாவியாச்சே! அவனுக்கு நம்முடைய காதலைப் பற்றி என்ன தெரியும்?-நாம் பாத்திரத்தைக் கொண்டா!' என்றால், அவன் 'காசைக் கொண்டா! என்று கேட்டுத் தொலைப்பானே? "நாம் ஒன்றும் அதிகமாக வாங்க வேண்டியதில்லை. ஒரு கரியடுப்பும், நாலு அலுமினியப் பாத்திரங்களும், தண்ணீருக்கு ஏதாவது ஒரு பெரிய ஏனமும் தற்சமயம் வாங்கிக்கொண்டால் போதும் ” 'அரிசி, உப்பு. பருப்பு. காய்கறி எல்லாம்.?” ”எல்லாவற்றிலும் கொஞ்சம கொஞ்சம் வாங்கிக் கொண்டால் போகிறது.”