பக்கம்:பாலும் பாவையும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 வந்தவருக்கு தூக்கிவாரிப் போட்டது. "ஏன்?”என்று நாக்குழறக் கேட்டார். “இங்கே செத்துப்போன நூலாசிரியர்களின் நூல்களைத்தான் வெளியிடுவது வழக்கம்.לל "அப்பொழுதுதான் அந்த நூலுக்கு ஒரு தனி மகத்துவம் இருக்குமென்றா...?” “அதெல்லாம் ஒன்றுமில்லை; எங்களுக்கு வேண்டியது எங்களிடம் இல்லாத மூளைl-அதைத் தவிர வேறொன்றும் செலவழிக்காத ஆசிரியருக்கு நாங்கள் அனாவசியமாகப் பணம் கொடுக்க விரும்புவதில்லை” "அப்படியானால் நீங்கள் செத்துப் போனவனிடமிருந்தா காகிதம் வாங்குகிறீர்கள்?’ என்று எரிச்சலுடன் கேட்டார். “கொடுக்கத் தயாராயிருந்தால் வாங்கத் தயாராயிருக்கிறோம்” என்றான் கனகலிங்கம் அமைதியாக “ரொம்ப சரி, உங்களுக்கு என்னுடைய நூல் கிடைக்காது; அஸ்திதான் கிடைக்கும்!” என்று சொல்லிவிட்டு, எழுத்தாளர் துப்பாக்கியிலிருந்து கிளம்பிய ரவையைப்போலக் கிளம்பினார். “முடிந்தால் அதையும் பணமாக்குவோம்!” என்றான் கனகலிங்கம். அதற்குள் கையில் ஒரு தினசரிப் பத்திரிகையுடன் அங்கே வந்த பரமசிவம் எழுத்தாளரைத் தடுத்து நிறுத்தி, "என்ன விஷயம்” என்று விசாரித்தார். அவர் நடந்த விஷயத்தைச் சொன்னார். “கிடக்கிறான் அதிகப்பிரசங்கி! அவனுக்கு என்ன தெரியும்?- ஏண்டா, இங்கே செத்துப் போனவர்களின் புத்தகங்களையா வெளியிடுகிறோம்?நீங்கள் கொடுத்து விட்டுப் போங்கள் ஸார்; நான் பார்த்து ஒரு வாரத்துக் கெல்லாம் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்” என்றார் அவர், எழுத்தாளர் அவரிடம் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்துவிட்டு கனகலிங்கத்தை ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டே சென்றார். கனகலிங்கம் அதைப் பொருட்படுத்தவில்லை; அவரை