பக்கம்:பாலும் பாவையும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 அகல்யாவின் உணர்ச்சி குன்றிற்று; உள்ளம் குன்றிற்று-ஏன், உடலே குன்றிற்று என்றுகூடச் சொல்லலாம். அதுமட்டுமல்ல: - அவளுடைய நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் கூட நிலை குலைந்தன. இப்பொழுது தான் சமூகத் தின் உண்மை யான சொரூ பத்தைப் பேதை அகல்யா கண்ணாரக் கண்டாள். கண்ட பிறகு, கேட்ட பிறகு, அவள் முதன் முதலாகக் கவலையும் கொண்டாள். ‘இன்னும் கொஞ்ச துரந்தான். இதோ போய்விடலாம் என்ற நம்பிக்கை அந்த நிலையிலும் அவள் நடைக்குக் கொஞ்சம் வேகம் கொடுத்தது. அவள் விறுவிறு' வென்று நடந்தாள். "அம்மா! டாக்ஸி வேண்டுமா, அம்மா?” “வேண்டாம்.” "அம்மா ரிக்ஷா வேண்டுமா, அம்மா?" “வேண்டாம்.” இவ்வாறு மறுத்துக்கொண்டு வரும்போது அவள் என்ன நினைத்துக் கொண்டாளோ என்னமோ, தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். அந்தச் சிரிப்பைத் தொடர்ந்து, அந்த நாட்களில் அப்பா ஊரிலிருந்து கேட்கும்போதெல்லாம் பணம் அனுப்பிக்கொண்டே இருப்பார்; நாம் பையைத் திறப்பதும் மூடுவதுமாக ப் பணத்தை அலட்சியமாக எடுத்து அனாவசியமாகச் செலவழித்துக் கொண்டிருப்போம். இப்பொழுது யார் நமக்கு அப்படிப் பணம் அனுப்பி வைக்கப் போகிறார்கள்? யாருடைய தைரியத்தைக் கொண்டு நாம் இப்பொழுது 'டாக்ஸி’க்கும் ரிக்ஷாவுக்கும் செலவழிக்க