பக்கம்:பாலும் பாவையும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 முடியும்?' என்று அவள் உள்ளம் கடந்த நாட்களை நோக்கியது. பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்யும் அப்பாக்களைப் போன்ற ஜீவன்கள் இந்த உலகத்தில் வேறு ஏதாவது இருக்க முடியுமா?’ என்று எண்ணி அவள் ஒரு கணம் வியந்தாள். மறுகணம், 'குற்றமற்ற அப்பாவின் அன்பை ஒரு நொடியில் உதறித் தள்ளி விட்டு, குற்றமுள்ள இந்திரனின் அன்பை நாம் தேடிச்சென்றோமே!-என்ன மடமை? எவ்வளவு மதியீனம்?' என்று எண்ணி அவள் பொருமினாள். 'பெற்ற தாயினும் மேலாக இன்னொருவர் நம்மிடம் அன்பு செலுத்த முடியுமா? நம்முடைய சுகத்திலும் துக்கத்திலும் அவளுக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்காவது இருக்க முடியுமா?-கடைசியில், தான் பத்து மாதங்கள் சுமந்து பெற்ற குழநதை எனபதையு ம மறந்து, அவள் நம்மை గ్లెక్టా .ெ வ று த் து த் ) த ள் ளு ம் ப டி ய | ன 體 நிலைமைக்கு அல்லவா இ நாம் இப்பொழுது வந்து - விட்டோம்? எல்லோரும் இத் செத்துப் பிரிந்தால் நாம் o 를 சாகா மலே ய ல் ல வா பி ரி ந் து வி ட் டோ ம் ? . அப்பப்பா! எ ன்ன கொடு ைம எவ்வுளவு கொடுரம் ! நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறதே!- உம், கடந்த காலத்தை எண்ணி இப்பொழுது வருந்துவதில் என்ன பயன்?-இனிமேல் என்ன நடக்கப் போகிறதோ? சியாமளா தன்னை எப்படி வரவேற்கப் போகிறாளோ? அவள் தன்னைப் பற்றி, தன்னுடைய நடத்தை'யைப் பற்றி என்ன நினைக்கப் போகிறாளோ? என்ன சொல்லப் போகிறாளோ..?