பக்கம்:பாலும் பாவையும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 அவள் எப்படி வரவேற்றாலும சரி, என்ன சொன்னாலும சரி!-அவளிடம் எதையும் ஒளிக்கக்கூடாது; எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் "ஆம், கனகலிங்கத்தைப் பற்றியும் அவரைப் பற்றித் தான் கண்ட கனவைப் பற்றியும், அந்தக் கனவு நிறை வேறாமற போய்விட்டதைப் பற்றியும்கூட அவளிடம் சொல்லிவிடத்தான் வேண்டும் - 'ஐயோ, இது என்ன? நம்முடைய கனவு நிறை வேறவில்லை என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? அவர் நம்மைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ! நமக்காக அவர் இன்னும் என்ன செய்யவேண்டுமென்று காத்துக் கொண்டிருக்கிறாரோ!-நாமோ எடுத்த தற்கெல்லாம் அவசரப்படுகிறோம்; அவரோ எதையும் ஆற அமர யோசித்து செய்கிறார்!-முன்பின் தெரியாத நமக்காக இவர் இதுவரை செய்திருக்கும் உதவியைத் தான் அற்ப மென்று தள்ளிவிடமுடியுமா? அவர் நம்மைக் கலைஞானபுரத்தில் சந்தித் திருக்காவிட்டால் நம் முடைய கதி தான் என்ன ஆகியிருக்கும்?-நமக்கிருக்கும் அவசரத்தின் காரணமாக நாம் இன்னும் எத்தனை தவறுகள் செய்திருப்போமோ? இன்னும் எத்தனை தொல்லைகளுக்கு ஆளாகியிருப்போமோ?. நல்ல சமயத்தில் கடவுள்போல வந்து அல்லவா அவர் நம்மைக் காப்பாற்றினார்..?’ அவர் நன்றாயிருக்கட்டும, அவருடைய வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறக் கட்டும், அவருடைய அறிவுச் சுடர் என்னைப்போல் அந்த காரத்தில் மூழ்கி அவதிப்படும் அபலைகளுக்கு வாழ வழி காடடட்டும்' அகல்யா இப்பொழுது எதையும் பொருட்படுத்தவில்லை; யாரையும் திரும்பிப் பார்ககவில்லை இருகைகளாலும் காதுகளைப் பொத்திக்கொண்டு மடமட வென்று நடந்தாள். 'பாம், பாம்-பாம்ப பாம், பாம்ப பாம் , ' மோடடார் ‘ஹாரன் சத்தம் அவள் காதில் விழவில்லை;