பக்கம்:பாலும் பாவையும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 எனவே அவளுடைய நடையில் வேகமும் குறையவில்லை திடீரென்று அவளுக்கு அருகே அந்த மோடடார் கிறீச்' சிட்டுக்கொண்டு நின்றது "அகல்யா! அகல்யா!-ஓ, அகல்யா' நினைவு கலைந்து அகல்யா நிமிர்ந்து பார்த்தாள் அவ்வுளவுதான், “சியாமளாவா என் சியாமளாவா" என்றாள் அவள் வியப்புடன் "ஆமாம், உன்னுடைய சியாமளாதான்" என்றாள் காரில் உட்கார்ந்துகொண்டிருந்த அந்தப் பெண்மணி 'இல்லை; என்னுடைய சியாமளா!” என்றான் அவளுக்கு அருகில் உட்கார்ந்து கொணடிருந்த அவள் கணவன் மணிவண்ணன். அவனைக் கடைக் கண்ணால் நோக்கிக் கொண்டே, 'உன்னைத்தான் நானும் தேடிக்கொண்டு வருகிறேன்' என்றாள் அகல்யா “யாரை?-என்னையா!' என்று மணிவண்ணன் தன்னைத் தானே சுட்டிக் காட்டி, தனக்கே இயற்கையான குறும்புடன் கேட்டான் சியாமளா சிரித்தாள், அகல்யாவும் அவளுடன் சேர்ந்து சிரித்து, தன்னுடைய மனச் சுமையை ஓரளவு குறைத்துக் கொண்டாள் "அவர் இன்னும் தன்னைச் சின்னக் குழந்தையாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார், அகல்யா'-நீ வா, வண்டியில் ஏறிக்கொள், வீட்டுக்குப் போவோம்” என்றாள சியாமளா அகல்யா தயங்கினாள், மணிவண்ணன சட'டெனறு காரை விட்டு இறங்கி, மோட்டாரோட்டிக்குப் பககததில் போய் உட்கார்ந்து கொண்டான் அகல்யா ஏறிக்கொண்டாள், கார் ஆடி அசைந்து நடந்து