பக்கம்:பாலும் பாவையும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 செல்லும் பாதசாரிகளைக் கண்டு எள்ளி நகை யாடிக்கொண்டே ‘விர்' என்று கிளம்பிற்று! 米 冰 xk அன்று மாலை கனகலிங்கம் சோர்வுடன் தன் அறைக்குத் திரும்பினான். நாள் பூராவும் அலைந்ததுதான் மிச்சம்; அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்க வில்லை. 'கையிலுள்ள காசு செலவழிவதற்குள் ஏதாவது ஒரு வேலை கிடைத்துவிட்டால் போதும் என்று எண்ணியவனாய், விவேகானந்தர் எழுதிய புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு படிப்பதற்காக உட்கார்ந்தான் பக்கத்தைப் புரட்டுவதற்குள் இருள் கவிந்து கொண்டு வந்தது எழுந்து சென்று விளக் கைப்போட்டு விட்டுத் திரும்பினான் அந்தச் சமயத்தில் முகத்தில் அசடு வழிய ராதாமணி அங்கு வந்து சேர்ந்தான் “என்னடா, ஏன் ஒரு மாதிரியா யிருக்கிறாய்?” என்று அவனை விசாரித்தான் கனகலிங்கம் “ஒன்று மில்லை; சொல்வதற்கு என்ன வோ போலிருக்கிறது ...” என்று மென்று விழுங்கினான் ராதாமணி “ஒன்று மில்லையாவது, சொல்வதற்கு என்னவோ போலிருக்கிறதாவது?-என்ன விஷயம்? சும்மா சொல்லு?” என்றான் கனகலிங்கம் "அம்மாவுக்கும நீ கெட்டவனாகி விட்டாய்...!"என்று மேலே ஏதோ சொல்ல ஆரம்பித்த ராதாமணி, சொல்ல முடியாமல் திணறினான் கனகலிங்கத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது “என்ன' என்று அவன் வாயைப் பிளந்தான் "ஆமாம், நான் எவ்வளவோ எச்சரிக்கையாயிருந்தும் கீதா நீ யாரோ ஒரு அக் கா'வை அழைத்துக் கொண்டு வந்திருப்பதாக அமமாவிடம் சொல்லிவிட்டாள் 'அவ்வளவு