பக்கம்:பாலும் பாவையும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 இரைக்க வந்து, அவர்களை உற்று உற்றுப் பார்த்தான். “என்ன பார்க்கிறீர்கள்?-நாங்கள் காதலர்களென்றா?இல்லை, இல்லை நானும் பெண்தான்; இவளும் பெணதான்” என்றாள் சியாமளா 'நன்றாய்ச் சொன்னாய்!-ஊருக்குப் பயந்து, உற்றாருக்குப் பயந்து, சிறிது நேரம் இங்கேயாவது நிம்மதியாயிருக்கலாம் என்று வரும் காதலர்களைப் படாத பாடுபடுத்துவதே இவர்களுடைய வேலையாய்ப் போய்விட்டது” என்றாள் அகல்யா வெறுப்புடன் அந்த ஆசாமி அப்புறம் அவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை; வெட்கித் தலை குனிந்தபடி விறுவிறு' வென்று அப்பால் சென்றுவிட்டான் இருவரும் கொல் லென்று சிரித்தார்கள்! சியாமளா, “நீ இங்கே வந்த பிறகு உன் அப்பாவைப் பார்த்தாயோ?” என்று எதையோ நினைத்துக் கொண்டவளபோல் அகல்யாவை நோக்கிக் கேட்டாள் 'இல்லை-அவர் இங்கே இருக்கிறாரா என்ன நான் அவரைப் பார்ப்பதற்கு?” என்றாள் அகல்யா. “உனக்கு விஷயம் தெரியாதா? அவர் இங்கே வந்து விட்டார் நான் இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறார்' என்றாள் சியாமளா அகல்யாவுக்கு தூக்கிவாரிப் போட்டது "உண்மையாகவா சொல்கிறாய்' என்று வியப்புடன் கேட்டாள் "ஆமாம், ஒரு வாரத்துக்கு முன்னால் அவரை நான் சந்தித்து உன்னைப் பற்றி விசாரித்தேன். நீ இறந்துவிட்டதாகவும், அதற்குப் பிறகு ஊரில் இருக்கத் தமக்குப் பிடிக்காமற் போய்விட்டதாகவும் அவர் என்னிடம் சொன்னார் எனக்கு விஷயம் புரிந்துவிட்டது பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல் வந்து விட்டேன்!” என்றாள சியாமளா இதைச சொல்லிவிடடு அவள் அகல்யாவின் முகத்தைச் சந்தேகக் கண்களோடு பார்த்தாள அவள் எதிர்பார்த்தபடி