பக்கம்:பாலும் பாவையும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 ஒரு நாள் மாலை வரும்போது தன் நண்பன் ஒருவனையும் அழைத்துக்கொண்டு வந்தான் அந்த நண்பன் தன்னுடைய பள்ளித் தோழனென்றும், ஏதோ வியாபார விஷயமாகச் சென்னைக்கு வந்திருக்கிறானென்றும், திரும்பிச் செல்ல இரண்டு நாட்களாவது ஆகுமென்றும் அவன் தன் மனைவியிடம் சொன்னான் இதைக் கேட்டதும் சியாமளாவின் உள்ளத்தில் 'பளிச்' சென்று ஒரு யோசனை உதித்தது அதன்படி மறு நாள் காலை எழுந்ததும் அவள் அவசர அவசரமாக இரண்டு கைக் குட்டைகளைத் தயார் செய்வதில் முனைந்தாள் அவற்றில் தன்னுடைய பெயரையும் வர்ண விசித்திரமான நூல்களைக் கொண்டு பொறித்தாள் அன்று மாலை மணிவண்ணன் தன்னுடைய நண்பனுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, சியாமளா அந்தக் கைக் குட்டைகளோடு விஷமததனத்துடன் சிரிததுக்கொண்டே அவனை நெருங்கினாள். “என்ன?’ என்று கேட்டான் அவன் “ஒன்றுமில்லை-இந்தாருங்கள், இதை என் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று அவனிடம் ஒரு கைக் குட்டையைக் கொடுத்து விட்டு, இன்னொன்றை அவனுடைய நண்பனிடம் கொடுத்தாள் மணிவண்ணனுக்கு இது பிடிக்கவில்லை, ஒஹோ!' என்று அவன் தன் விழிகளை உயர்த்தி அவளை ஒரு தினுசாகப் பார்த்தான், அவளும் பதிலுக்கு அவனை ஒரு தினுசாக பார்த்து வைத்தாள் இருவரும் சிரித்தார்கள் மணிவண்ணனுடைய நண்பனுக்கு விஷயம் புரியவில்லை; அவன் அவர்களை வியப்புடன் பார்த்தான் ஆனால், அகல்யாவுக்கு விஷயம் புரிந்துவிட்டது அவள் அதற்காகச் சியாமளாவை நொந்து கொள்ளவில்லை, தன்னைத் தானே நொந்துகொண்டாள் அதுமட்டுமல்ல; சியாமளாவை