பக்கம்:பாலும் பாவையும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகல்யா, கனகலிங்கத்தின் அறையை நெருங்கிய போது உணர்ச்சியற்ற நகரம் ஒரு கவலையும் இல்லாமல் உறங்கிக்கொண்டிருந்தது. அவரும் இந்நேரம் தூங்கியிருப்பார்: கதவும் உள்ளே தாளிடப்பட்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டே, அவள் மாடிப்படிகளின்மீது மெள்ள அடிமேல் அடி வைத்து ஏறினாள்-'அவர் நம்மைக் கண்டதும் என்ன சொல்வாரோ, என்னமோ!' என்ற அச்சம் தான் அதற்குக் காரணம். ஆனால் அவள் எதிர்பார்த்தபடி கதவு உள்ளே தாளிடப்பட்டிருக்கவில்லை; வெளியே பூட்டியிருந்தது. ஆளைக் காணோமே; வெளியே போயிருக்கிறார் போலிருக்கிறது:-எங்கே போயிருப்பார்?என்ன தான் வேலை தேடப் போயிருந்தாலும் இவ்வளவு நேரம் ஆகியுமா திரும்பாமலிருப்பார்.? அகல்யா ஒருகணம் அந்தப் பூட்டை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மறுகணம், ‘என்னைப்போல் யாராவது ஒருத்தி இருந்தால் அவர் பொழுதோடு வீட்டுக்கு வருவார்! யாருந்தான் இல்லையே; எங்கே சுற்றிக் கொண்டிருக்கிறாரோ, என்னமோ!' என்று முகத்தைச் சுளித்துக் கொண்டே திரும்பினாள். அப்பொழுதுதான் தன்னிடமும் ஒரு சாவி இருக்கும் விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. மறுபடியும் மேலே வந்து கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள். 'வா, வா! இனிமேல் நீ இங்கே வரவே மாட்டாய் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருந்தேன்?-வந்து விட்டாயே! என்று முகமன் கூறி, அவளை யாரோ வரவேற்பது போலிருந்தது. அகல்யா சுற்றுமுற்றும் பார்த்தாள்: யாரையும் காணவில்லை. ஆமாம். அந்த அதிசய மனிதர் இப்பொழுது இங்கே