பக்கம்:பாலும் பாவையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞானபுரத்தில் உள்ள நளா விலா'ஸில் கனகலிங்கம் தங்கினான். அன்றிரவு அவன் சாப்பிட்டு விட்டுப் படுக்கப் போகும்போது மணி எட்டு, எட்டரை இருக்கும். மறுநாள் காலை 'அகத்தியர் விழா ஆரம்பமாகவிருந்தது. அதற்காக அந்தப் புத்தகத்தில் நாலு, நாலு பிரதிகளை எடுத்துத் தனியாக வைத்துவிட்டு அவன் படுக்கையை விரித்துப் படுத்தான். எங்கிருந்தோ ஒரு பெண்மணியின் விம்மல் சத்தம் வந்து அவன் காதில் விழுந்தது எழுந்து உட்கார்ந்து, அந்த விம்மல் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று கவனித்தான். கேட்பவர்களின் ஊனையும் உள்ள்த்தையும் ஒருங்கே உருக்கும் சக்தி பெற்றிருந்த அந்தச் சத்தம் வேறு எங்கிருந்தும் வரவில்லை; அவன் தங்கியிருந்த அறைக்கு அடுத்தாற்போலிருந்த அ ைற யி லி ரு ந் து த ா ன் வ ந் து கொண்டிருந்தது. - 'அடுத்த அறையில் யாரோ حهك கணவனும் மனைவியுமாக வந்து தங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது!வந்த இடத்திலாவது இவர்கள் வம்பில்லாமல் இருக்கக்கூடாதோ? வீட்டிலும் சண்டை, வெளியிலும் சண்டைதானா?-வள்ளுவர் சொன்ன இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம், மனை மாட்சி-இவற்றின் லட்சணம் இதுதானா?” என்று தனக்குள் அலுத்துக்கொண்டே, கனகலிங்கம் மீண்டும் படுக்கையில் படுத்தான். வினாடிக்கு வினாடி அந்த விம் மல் சத்தம் அதிகரித்துக்கொண்டே சென்றது. 'இது என்ன சங்கடம்?-மனைவியை அழவைத்து விட்டுக் கணவன் என்ன செய்துகொண்டிருக்கிறான்? கனகலிங்கம் எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான் விம்மல் சத்தம் படிப்படியாக நின்று, அழுகை ஒரேயடியாகப் பீறிட்டுக்கொண்டு வந்தது. ஒன்றும் புரியாமல் கனகலிங்கம் சிறிது நேரம் அப்படியும் இப்படியுமாக உலாவினான்.