பக்கம்:பாலும் பாவையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 'இந்த வேதனையை எவ்வளவு நேரம் சகித்துக் கொண்டிருப்பது? கணவனுக்காக மனைவி தூங்கா மலிருக்கலாம்; மனைவிக்காக கணவன் தூங்காமலிருக்கலாம்இவர்களுக்காக நான் ஏன் தூங்காமலிருக்க வேண்டும்? கனகலிங்கம் தன் அறையைவிட்டு வெளியே வந்தான். அந்த ஹோட்டல் மாடியில் அவர்கள் தங்கியிருந்த இரண்டு அறைகளைத் தவிர வேறு அறைகள் எதுவும் இல்லை. கீழே ஹோட்டல் தொழிலாளிகள் அனைவரும் படுத்துக்கொண்டு விட்ட்ார்கள். முதலாளி கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டார். தெருவிலும் ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லை. அங் கங்கே ஓரிருவர் ஏணியின் மீதும் சுவரின் மீதும் ஏறி. அகத்தியர் விழா வுக்காகஇல்லை, கூலி க்காக - மாவிலைத் தோரணங்களைக் கட்டிக் கொண்டிருந்தனர். அந்தத் தோரணங்களுக்கு இ ைட யி ைட ேய க ட் - ப் ப ட் டி ரு ந் த அட்டைகளில் அக்ஸ்டியர்' வாழ்ந்து கொண்டிருந்தார்; அவருடன் டமி லும் போனாற் போகிறதென்று வாழ்ந்து கொண்டிருந்தது. ஒருகணம் கைப்பிடிச் சுவரில் கைகளை ஊன்றியவண்ணம் மேற்கூறிய காட்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்தான் கனகலிங்கம். மறுகணம் 'பாவம், அகத்தியன்!” என்று முணுமுணுத்துக் கொண்டே அறைக்குத் திரும்பினான். அப்பொழுதும் அடுத்த அறை யிலிருந்து வந்து கொண்டிருந்த அழுகைச் சத்தம் நிற்கவில்லை! அட கடவுளே! நல்ல முறையில் அவளைச் சமாதானப்