பக்கம்:பாலும் பாவையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 படுத்த முடியாவிட்டாலும் கொஞ்சம் அதட்டி மிரட்டியாவது பார்க்கக் கூடாதா, அவன்? ஆசாமியின் குரலையே காணோமே! பெட்டிப் பாம்பாய்ச்சுருண்டு கிடக்கிறானோ? அதெல்லாம் ஒன்றும் இருக்காது; அவன் அவ்வளவு சாதுவாக இருந்தால் அவளை ஏன் வம்புக்கு இழுத்து அழவைத்திருக்கப் போகிறான்? ஒருவேளை அப்படி' ஏதாவது...!" கனகலிங்கம் கொஞ்சம் துணிந்து, மெல்ல அடுத்த அறை யை நெருங்கினான். நல்ல வேளையாக கதவு உள்ளே தாளிடப்படாமல் வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருந்தது; சந்தடி செய்யாமல் கதவைக் கொஞ்சம் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான். இது என்ன கூத்து!-உள்ளே இருந்தவள் ஒரு பெண்; ஒரே ஒரு பெண்!-அவளுடன் யாரும் இல்லை: ஆமாம், யாரும் இல்லவே இல்லை! 参& - יי ו -9|1D if» fT... ! . இந்த வார்த்தை அவன் வாயிலிருந்து சரியாகக் கூட வெளிவரவில்லை. அதற்குள் பழைய சம்பவ மொன்று அவனுடைய நினைவுக்கு வந்துவிட்டது. ஒரு சமயம் அவன் இப்படித் தான் ஒரு பெண்மணியை அம்மா!' என்று அழைத்துவிட்டான். வந்தது மோசம்: 'என்னைப் பார்த்தால் அவ்வளவு வயதாகி விட்டவள்போலவா தோன்றுகிறது!’ என்று கத் திக் கொண்டே அவள் அவனுடன் சண்டைக்கு வந்து விட்டாள் - அதிலிருந்து எந்தப் பெண்மணியைக் கண்டாலும் அவன் அம்மா!' என்று அழைப்பதில்லை இப்பொழுது. சரி, வேறு என்னவென்று அழைப்பது?