பக்கம்:பாலும் பாவையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 காலை மாடி வராந்தாவுக்கும் இந்த அறைக்குமாக நடை போட்டுக்கொண்டிருந்தேன். மணி ஏழு, எட்டு என்று பத்தும் ஆயிற்று. எதிர்பாராத விதமாகத் தபாற்காரன் என்பெயருக்கு வந்திருந்த ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தான். பரபரப்புடன் அதை வாங்கிப்படித்தேன்-அகல்யா! என்னை மன்னித்துவிடு. தெய்வத்தைப்போல நான் ஒன்று நினைக்க, நீ ஒன்று நினைத்துவிட்டாய்!-இனிமேல் என்ன செய்வது?-காதலினால் ஆத்மாவைத்தான் திருப்திப்படுத்த முடியும். வயிற்றைத் திருப்திப்படுத்த முடியாது. எனவே ஒன்றும் புரியாமல் நான் வந்த வழியே திரும்பிச் செல்கிறேன். கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும்-இந்திரன்’ என்று அந்தக் கடிதத்தில் அவன் எழுதியிருந்தான். - எ ன க் கு எ ப் ப டி --- இ ரு ந் தி ரு க் கு ம் ? - الجہ - பைத்தியம் பிடித்தவள் -\ W. போல அந்தக் கடிதத்தை ஒரு முறை, இரு முறை, மும்முறை நான் உற்றுப் பார்த்தேன். பிறகு, சுக்கு நூறாக அதைக் கிழித்து எறிந்து விட்டு அழுதேன், அ ழு ேத ன் அ மு. து ெக | ண் ேட இருந்தேன்.” “பேஷ்! இந்திரன் அசல் இந்திரனாகவே இருந்திருக்கிறானே?’ என்றான் அவன் 'உங்களுக்கு எல்லாம் வேடிக்கையாயிருக்கிறது; எனக்கே வேதனையாயிருக்கிறது!’ என்றாள் அவள். "எல்லாவற்றையும் வேடிக்கையாகக் கருதுவதால் தான் இந்த உலகத்தில் நான் இன்னும் உயிரோடிருக்கிறேன்!”