பக்கம்:பாலும் பாவையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 "ஆமாம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில் ஆண்கள் கெட்டிக்காரர்கள் என்று சொல்கிறார்களே, அதுகூட உண்மைதான்!” "நீ சொல்வதைப் பார்த்தால் இப்பொழுது நம்மிடையே காதல் புனர்ஜன்மம் எடுத்து விட்டதுபோல் தோன்றுகிறதே?” “நீங்கள் நீ ஆனபிறகு காதல் புனர்ஜன்மம் எடுக்காமல் என்ன செய்யும்?” "நாசமாய்ப் போச்சு! காதலுக்குக் காசு அல்லவா நிறைய வேண்டியிருக்கிறது?” “காசு பெரிதல்ல; எனக்குக் காதல்தான் பெரிது!’ கனகலிங்கம் சிரித்தான். “ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டாள் அகல்யா. “ஒன்றுமில்லை; தூக்கம் வருகிறது!’ என்று மீண்டும் அதே பதிலைச் சொல்லிவிட்டு, அவன் ஒரு நீண்ட கொட்டாவி விட்டான். "அப்படியானால் போய்த் தூங் குங்கள்; மேலே பேசுவதற்குத்தான் மூன்று நாட்கள் இருக்கிறதே!” “அது சரி, காதலுக்குத் தூக்கம் பிடிக்காதாமே?” "ஆமாம், அது ஒரு பசியாம்; அந்தப் பசி தீர்ந்தால்தான் தூக்கம் பிடிக்கு மாம்!” என்று சொல்லிக் கொண்டே கனகலிங்கத்தை நெருங்கி, அவனுடைய தோள்களை அதற்குள் பற்றத் துணிந்தாள் அகல்யா. கனகலிங்கம் கொஞ்சம் விலகி, "ஐயோ, வேண்டாம்; பசி’ தீர்ந்து விட்டால் நானும் இந்திரனைப்போல் ஒட்டம் பிடித்தாலும் பிடித்துவிடுவேன்!”என்று சொல்லிக்கொண்டே தன் அறைக்கு விரைந்தான்.