பக்கம்:பாலும் பாவையும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 தன்னுடைய சொந்த உழைப்பை நம் பி-வாழ்வதற்குத் தைரியமில்லாத அவன், என்னுடைய நகை நட்டுகளைக் கொண்டு வாழமுடியும் வரை கண்ணே, மூக்கே! என்று என்னுடன் காதல் புரிந்திருக்கப்போகிறான்; அதற்குப் பிறகு, "அதைக் கொண்டா, இதைக் கொண்டா!' என்று அப்பாவிடமும் அம்மாவிடமும் விரட்டி யடித்திருக்கப் போகிறான்!” ‘என்ன அநியாயம்!-இந்தப் புண்ணியாத்மாக்கள்தான் வருங்காலத் தலைவர்களாமே! சமூகத்தைச் சீர்திருத்தப் போகிறவர்களாமே!’ இதை நினைத்ததும் தன் துயரத்தை மறந்து அகல்யா 'களுக் கென்று சிரித்து விட்டாள். அத்துடன் அவள் சிந்தனையும் கலைந்து விட்டது, "அட கடவுளே, கடவுளே!” என்று வாய்விட்டுச் சொல்லியபடி, அவள் கட்டிலை விட்டு எழுந்து, முந்தானையைத் தரையில் விரித்துப் படுக்கப்போனாள். இந்தச் சமயத்தில், “கடவுள் இல்லை; இங்கே கனகலிங்கம்தான் இருக்கிறார்!” என்றான் அவன் படுக்கையில் கிடந்தபடியே. "இன்னும் நீங்கள் தூங்கவில்லையா?" என்று கேட்டாள் அவள். 'நீகூட இன்னும் தூங்கவில்லைபோலிருக்கிறதே!” என்றான் அவன். இருவரும் சிரித்தார்கள்; சிரித்து, தங்கள் குற்றத்தையும் அதனால் ஏற்பட்ட வெட்கத்தையும் ஒருவருக் கொருவர் மறைத்துக்கொள்ளப் பார்த்தார்கள்! >k >k sk மறுநாள் பொழுது விடிவதற்கு முன்பே அகல்யா தன்னுடைய தூங்காத தூக்கத்திலிருந்து எழுந்து விட்டாள். அப்பொழுது இளைய சூரியனின் ஒளியை முகமலர்ச்சியுடன் வரவேற்று முதுமையடைந்த இருள் கொஞ்சங் கொஞ்சமாக விலகிக் கொண்டிருந்தது. அந்த அபூர்வக் காட்சியைக் கண்டதும் பகலுக்காக இரவும், இரவுக்காகப் பகலும் தியாகம் செய்வதுபோல உலகத்தில் ஆணுக்காகப் பெண்ணும்