பக்கம்:பாலும் பாவையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அகல்யா சிரித்தாள். சிரித்துவிட்டு, “நீங்கள் சொல்வதென்னமோ உண்மைதான்!-ஆனால் என் சிநேகிதி அப்படிப் பட்டவளல்ல; அவளுக்கு எப்பொழுதுமே என்னிடம்அன்பும் அனுதாபமும் உண்டு. நான் இங்கே வந்து சேர்ந்ததும் முதல் காரியமாக அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன், உடனே சந்தோஷம் தாங்காமல் என்னுடைய காதல் கல்யாணத்துக்குப் பரிசாக அவள் இவற்றையெல்லாம் வாங்கி அவசரம் அவசரமாக அனுப்பி வைத்திருக்கிறாள்” என்றாள். "இவற்றால் என்ன பிர்யோஜனம் உனக்கு?” "ஏன் பிரயோஜனமில்லை? உங்களுக்குப் பிடித்தமான முறையில் நான் என்னை அழகு படுத்திக் கொள்ளலாமல்லவா?” “அது என்ன, எனக்குப் பிடித்தாற்போல!-அப்படியே இருந்தாலும் அழகுச் சாதனங்களைக் கொண்டு முகத்தைத்தானே அழகு படுத்திக் கொள்ள முடியும்? அகத்தை அழகு படுத்திக்கொள்ள முடியாதே' அகல்யாவுக்கு இது பிடிக்கவில்லை. சட்டென்று அவள் கட்டிலில் உட்கார்ந்து, முகத்தைத் தலையணையில் புதைத்துக் கொண்டாள். 'அழுகிறாயா, என்ன?” "ஆமாம், போங்கள்!-நீங்கள் சொல்லும் அழகுக்கு அழாமல் சிரிப்பார்களாக்கும்?” "அழ அழச் சொல்பவர்கள்தான் நல்லவர்கள்; சிரிக்கச் சிரிக்கச் சொல்பவர்கள் கெட்டவர்கள்.” "நீங்கள் நல்லவராக இருக்க வேண்டாம்; கெட்டவராகவே இருங்கள் போதும்.” "அப்படியானால் நானும் இந்திரனைப் பின்பற்ற வேண்டியதுதான்!” இதைக் கேட்டதும் தலையணையிலிருந்து முகத்தை எடுத்துக்கொண்டு அகல்யா களுக் கென்று சிரித்தாள். அந்தச்