பக்கம்:பாலும் பாவையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தான் சொல்ல வந்ததை அவன் சொல்லி முடிக்கவில்லை: அதற்குள் அவள் பொறுமையிழந்து, பேயாகிவிட்டேனா?” என்றாள். அவள் கண்கள் கலங்கின; இதோ வந்து விட்டோம்!” என்று கண்ணிர்த் துளிகள் வேறு கீழே விழுந்து சிதறி அவனைப் பயமுறுத்தின. 'இல்லை; பேய் கண்ணுக்குத் தெரியாமல்தானே ஆளைப் பிடித்து ஆட்டுகிறது?’ என்றான் அவன், அவளுடைய முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டே. 'நான் கண்ணுக்குத் தெரிந்து உங்களைப் பிடித்து ஆட்டுகிறேனாக்கும்?” என்றாள் அவள், அவனைப் பார்க்கப் பிடிக்காமல் தலையைக் குனிந்துகொண்டே, "ஆமாம்; ஆனால் அம்பலத்தில் ஆட்டி வைக்கவில்லைஅறையிலேயே ஆட்டி வைக்கிறாய்!” என்று அவன் விறைப்புடன் அவள் இருந்த பக்கம் திரும்பினான் அவ்வளவுதான்; அகல்யா அதுவரை இழந்திருந்த பெண்மையை மீண்டும் பெற்றாள். அவளுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்துவிட்டது. குபுக்’ கென்று அழுதே விட்டாள்! இப்பொழுதுதான் ‘சிவன் சிரித்து மட்டும் புரத்தை எரிக்கவில்லை; நெற்றிக் கண்ணையும் காட்டித்தான் எரித்தான்! என்னும் விஷயம் கனக லிங்கத்துக் குப் புலப் பட்டது. அதே மாதிரி நாமும் இப்பொழுது நெற்றி க் கண்ணை த் திறந்துவிட்டோமா, என்ன? அவன் மெளனமானான். ஒருகண நேர மெளனத்துக்குப் பிறகு அவன் மனம் வேறு திசையை நோக்கித் திரும்பிற்று-ஐயோ பாவம்.உலகம் தெரியாத அபலை அவள்!-காதலை உண்மையென்று நம்பினாள்.