பக்கம்:பாலும் பாவையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 'இரண்டு பேரையும்தான் சொல்கிறேன்!” “இதுவரை உனக்குக் கண்கள் இருக்கின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது இல்லை என்று தெரிகிறது .' - “দ্য ক্টো?” ‘போயும் போயும் என்னை, அழகன் என்று சொல்கிறாயே, இதிலிருந்தே தெரியவில்லையா?” “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.” "அப்படியானால் இப்பொழுது உன்னுடைய எண்ணம் அழகாயிருக்கிறதாக்கும்?” "ஆமாம்! எண்ணம் அழகா யிருப்பதனால்தான் நீங்கள் எனக்கு அழகனாகத் தோன்றுகிறீர்கள்!” “ரொம்ப ஆபத்தான விஷயமாக அல்லவா இருக்கிறது. இது ?” “எது ஆபத்தான விஷயம்? ஒரு பெண்ணின் வாழ்க்கையை மலர வைப்பது ஆபத்தான விஷயம்?” “இப்பொழுது நீ சினிமா பாஷை யில் பேசுகிறாய் என்று நினைக்கிறேன்.” 'இல்லை இலக்கிய பாஷை யில் பேசுகிறேன்.” 'எந்த ப் பா ைஷ யாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நானும் அதே பாஷையில் பேசட்டுமா?-மலர் இருக்கிறதே மலர், அது இருமுறை மலர்வதில்லை. ஒரு முறைதான் மலர்கிறது!”அவன் முகம் கடுகடுத்தது. "நான் மலர் அல்ல. பெண்'-அவள் முகம் சிடுசிடுத்தது. "ஆமாம்: ஒரு காலத்தில் நீ பெண்ணாகத்தான் இருந்திருக்க வேண்டும் இப்பொழுது ”