பக்கம்:பாலும் பாவையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 போலிருந்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, "இல்லை; இல்லவேயில்லை!” என்று அவன் ஒரேயடியாகச் சாதித்தான். “கதை, வெறும் கதை' என்று அவளும் அவனுக்குச் சளைக்காமல் சாதித்தாள். > கனகலிங்கம் பேசாமலிருந்தான். சிறிது நேரம் மெளனமாக இருந்த பிறகு, “காந்திஜியின் தத்துவத்தில் உங்களுக்கு நம்பிக்கை புண்டா?” என்று கேட்டுப் பேச்சை மாற்றினாள் அகல்யா. “உண்டு” என்றான் கனகலிங்கம். “வகுப்பு வெறியின் காரணமாகக் கற்பழிக்கப்பட்ட பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் சொல்லவில்லையா?” “சொன்னார்!” "அதே ம்ாதிரி நானும் ஏதோ ஒரு வெறியால் கற்பழிக்கப்பட்டவள்தானே?-என்னை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது?’ என்று கேட்டு, அவள் அவனை மடக்கினாள். இப்பொழுதுதான் பிடி கிடைத்தது அவனுக்கு. "நீ சொல்வது ரொம்ப சரி; ஆனால் அவர்களுக்கும் உனக்கும் வித்தியாசம் இருக்கிறதே...!" அவள் குறுக்கிட்டு, “என்ன வித்தியாசம்?” என்று கேட்டாள் "தங்களுடைய விருப்பத்துக்கு விரோதமாக அவர்கள் கற்பழிக்கப்பட்டார்கள்; நீ அவ்வாறு கற்பழிக்கப்படவில்லை!" என்றான் அவன். அகல்யாவின் மென்மையான உள்ளத்தில் இது சுருக்கென்று தைத்தது. இந்தச் சுடு சொற்களால் ஏற்பட்ட வேதனையைத் தாங்கமுடியாமல் அவள் கலகலவென்று கண்ணீர் உதிர்த்தாள். "உன்னுடைய கடைசி ஆயுதத்தைப் பிரயோகிக்க ஆரம்பித்துவிட்டாய் போலிருக்கிறதே?” "நான் உங்களைக் கடைசியாகக் கேட்கிறேன்-நீங்கள்