பக்கம்:பாலைக்கலி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி - 13 அயராமற் பார்த்துக்கொண்டே இருந்தார். அப்படியும் அவர் திருப்தியடையவில்லை. என் நெற்றியிலோ வியர்வு அரும்பிற்று. அதனால், என் துதலழகு ஒளி குறையவே, அவ்வியர்வைத் துடைக்க முயன்றார்! அவர் எண்ணம் எதுவோ? அதனை நான் அறியேனடி' என்றெல்லாம், நீ நேற்றுச் செய்த பேரன்புச் செயல்களை நினைத்து அவள் வாடுவாள். நெஞ்சம் கட்டு அழியக் கலங்கிய வருத்தம் உடையவளாகவும் இருக்கின்றாள். ஒரு நாள் சிறிது நேரமே இடையில் நீ பிரிந்து சென்றாலும் அவள் உயிர் வாழமாட்டாள். பெருமானே! பொருளை விரும்பி இவளைத் தனித்திருக்கச் செய்து செல்லும் நின் பயணத்தை இப்பொழுதே நிறுத்தி விடுவாயாக. கருத்து: தோழி கூறியதனால், தலைவி, தன் பிரிவினைத் தாங்காது இறந்துவிடுதலையும் செய்வாள் என அஞ்சிய தலைவன், தன் போக்கை நிறுத்திவிடுவான் என்பதாம். சொற்பொருள்: 1. முன்பு - வலி, வல்லென்ற - திண்ணிய, 2. கரிவளர் பித்தை சுருண்டு வளர்ந்த மயிர். 3. அற்றம் - ஏற்ற காலம். அல்கும் - காத்திருக்கும். 4. வம்பலர் வழியில் புதியராக வருவார். 5. துள்ளுநர் - அம்பு பட்டு வீழ்ந்து துடிக்கும் நிலையினர். காண்மார் - காணுதற் பொருட்டு 6 புள் - பறவை. புலம்பு துன்பம்; ஆர் இடை-கடத்தற்கு அரிய வழி.8.உள்ளினர் - எண்ணங் கொண்டுள்ளாய், 9. காழ் - முத்து மாலை. மீவரும் - கிடந்து புரளும்.10.முயங்கியும் தழுவியும்.11.கதுப்பு-தலைமயிர். அணிகுவர் - செப்பம் செய்து அழகுபடுத்துவர். 12, சூழ்வது எண்ணுவது.13 உறழ் ஒத்த எயிறு பற்கள்.15. இழை அணிகள். 17. மாமை - அழகு தரும் பொன்னிறம். சுணங்கு - அம்மேனியில் ஆங்காங்கே தோன்றும் அழகுத் தேமல், 22 கழிபெரும் நல்கல் - மிக்க பேரன்பு. ஒன்று உடைத்து - ஒரு செயலை உடைத்து. 23. அழிவு உள்ளத்துயர். எவ்வம் வருத்தம். 4. உறவெல்லாம் பொய்யோ? (தலைவியைப் பிரிந்து சென்று பொருள்தேடி வருதலை நினைத்து ஏற்பாடு செய்கிறான் ஒருவன். அவன் பிரிந்தால் அவன் மனைவி துயரடைவாளே எனக் கலங்குகிறாள் அவள் தோழி. அவனிடம் சென்று பலவும் கூறி, அவன் போக்கைத் தடுத்து நிறுத்துதற்கும் முயல்கின்றாள்.) . - பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/21&oldid=822011" இலிருந்து மீள்விக்கப்பட்டது