பக்கம்:பாலைக்கலி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கலித்தொகை மூலமும் உரையும் ஒன்பது. 10. கல் என கல்லென்னும் பேரொலி எழ, ஆற்றுப் படுத்த பின் நடந்து கழிந்த பின்னர். 1. புல்லென்ற - பொலிவு இழந்த புலம்பு - தனிமைத் துன்பம், 12 அலைபெற்ற அழிந்த 13. பைதல் - துன்பம். ஒர் இரா வைகல் - ஓர் இராக் காலத்தில். 17. பொய்ந் நல்கல் புரிந்தனை - அன்பு காட்டுவான்போலப் பொய்யே நடித்தனை. புறந்தரல் - புறத்தைத் தழுவிப் பாதுகாத்தல், 5. என்னையும் அழைத்துப் போ! (தன்னைப் பிரிந்து செல்ல நினைக்கும் தன் அன்பனிடத்தே தன்னையும் அவனுடன் அழைத்துப் போகுமாறு வேண்டுகின்றாள் ஒரு காதல் மனைவி) மரையா மரல் கவர, மாரி வறப்ப - வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர், சுரை அம்பு, மூழ்கச் சுருங்கி, புரையோர் தம், உள் நீர் வறப்பப் புலர் வாடும் நாவிற்கு - தண்ணி பெறாஅத் தடுமாற்று அருந் துயரம் 5 கண்ணி நனைக்கும் கடுமைய, காடு என்றால், என், நீர் அறியாதீர் போல இவை கூறல்? நின் நீர அல்ல, நெடுந் தகாய்! எம்மையும், அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு துன்பம் துணையாக நாடின், அது அல்லது 10 இன்பமும் உண்டோ, எமக்கு? புல் நுனியுங் காணாதனவாயின காட்டுப் பசுக்கள், பசியால் மெலிந்தவாகி, ஆங்குள்ள கள்ளிச் செடிகளைத் தின்னத் தொடங்கும். மழையோ பெய்யாது போயிற்று. நீர் நிலையோ அறவே வற்றிப் போயிற்று. இத்தகைய தன்மையுடையது காட்டு வழி. அக் காட்டுவழி உயரமான பாறைகளால் நிறைந்தது; கடத்தற்கரியது. மேலும், அவ்வழிச் செல்பவர்கள், ஆறலைகள்வர் தம் அம்புக் கூட்டிலிருந்து எடுத்து எய்கின்ற அம்புகட்கும் பலியாவர். அந்த ஆறலை கள்வரும், வெப்பத்தால் மெலிந்தவராகி, உண்ணும் நீரும் கிடையாது வாடித் துடிப்பர். இவ்வாறு பலவிதத் தடுமாற்றங்களையும் உடையது காடு. அதன் வழிச்செல்வார் படும் கடுமையான துயரத்தால் சொரியும் கண்ணிர்தான் அந்நிலத்தை வீழ்ந்து நனைக்கக் காணலாம். 'கடுமை உடையது காடு' என்று நாம் இவ்வாறு எடுத்துச் சொல்லியும், நீர் ஏதோ அறியாதவர்போல், மீண்டும் பிரிந்து அவ்வழிச் செல்வதையே கூறுகின்றீர். என் செய்வது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/24&oldid=822014" இலிருந்து மீள்விக்கப்பட்டது