பக்கம்:பாலைக்கலி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கலித்தொகை மூலமும் உரையும் 'எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல், உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும், நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக் குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணி! - வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை, 5 என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும், தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்; அன்னார் இருவரைக் காணிரோ? - பெரும!' 'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை, ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய 10 மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர். பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை, மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்? நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே. சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, 15 நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்? தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே. ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை, யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்? சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அணையளே. 20 - என ஆங்கு - இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்; சிறந்தானை வழிபடீஇச் சென்றனள், அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே. வெயிலோ சுட்டு எறிக்கின்றது. அதைத் தாங்கிக் கொள்ளக் குடை பிடித்தவராக வருகின்றனர் சிலர். தோளில் தாங்கிவரும் ஒரு தண்டின் முனையிலே, உறி ஒன்றும் தொங்குகின்றது. அதில் அவர்களுடைய பிச்சைப் பாத்திரம் இருக்கிறது. புகழ் பெற்ற முக்கோலும் அவர்களிடம் இல்லாமலில்லை. அதனையும் முறையாகத் தோளிலே காணலாம். இறைநினைவன்றி வேறு நினைவற்ற நெஞ்சுடையார் அவர். அந்த எண்ணம் ஏவப் பல தலங்களையும் சென்று காணும் ஆசையால் நடந்து வருபவர். பாலை வழிகளாயினும் அதனைக் கடந்து செல்லும் வழக்கம் உடையவர். அவரைக் கண்டு, அந்த அம்மை, "அந்தணர்களே! என் மகள் ஒருத்தியும், இன்னொருத்தியின் மகன் ஒருவனும், தம்முள்ளே காதலாற் கலந்தவர், தாம் மட்டுமே அறியக் களவிலே கூடி மகிழ்ந்தவர், அத்தகையவர் இருவரையும் வழியிடையிலே செல்லக் கண்டீர்களோ, பெருமக்களே?’ என்று விசாரிக்கின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/30&oldid=822021" இலிருந்து மீள்விக்கப்பட்டது