பக்கம்:பாலைக்கலி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

yeòyää G=éìsēa * uredewš seš] 25 கோடைகாலம்; வெப்பநிலையே சொல்லுந்தரமன்று. அதன் கொடுமையை எவ்வாறு சொல்லினாற் கூறுவது? ஏழைமை எப்போதுமே துன்பந் தருவதென்றால், அதிலும் இளமைப் பருவத்தினன் ஏழ்மையால் படும் வேதனைதான் மிக மிக அதிகம். இதனை நீ அறிவாய். வாழ்க்கைக் கனவுகள் முழுவதையும் இழந்து, அவ்விளைஞன் அல்லற்படுவான் அன்றோ! அதேபோல், மரங்கள் எல்லாம் பயன்தரும் கனி வகைகள் காய்க்க வேண்டிய நல்ல பருவத்திலே, துளிர்த்த பூந்தாதுகள்கூட வெம்மைக்கு அற்றாவாய் வாடி உதிர்ந்து விடும் நிலைமையையுடையது, அக்காடு. - சிறுமைக்குண்ம் உடையவனிடம் செல்வம் சேர்வதால் பயனுண்டோ? அவனுக்கும் பயன்படாது; பிறருக்கும் உதவியாக அது அமையாது; அது வீணாகத்தான் போகும்! அதைப்போலவே, மரங்கள் எல்லாம் தழையற்ற மொட்டை மரங்களாகிக் காணப்படுகின்றன. அதனடியிற் சென்று நின்றாலும்கூடக் களைப்பைப் போக்கும் நிழலைச் சற்றேனும் பெற இயலாதபடி கொடுமையுடையதான, காடும் அது. எல்லாரிடத்தும் தீய செயல்களையே செய்த ஒருவன் நல்ல பெயருடன் எங்காவது வாழமுடியுமா? அவன் பெயர், கெட்டவன்’ என்றுதானே விளங்கும்? அவன் முடிவும், துன்ப முடிவாகத்தானே இருக்கும். அதைப்போலவே, அக் காட்டில் மரங்கள் எல்லாம் வேரோடும் வெம்பிக் கிடக்கும். உலகிலே விரிந்து பரவும் கதிரவனின் கதிர்கள், அனைத்தையும் சுட்டு வருத்தும் அத்தகைய கோடைகாலத்திலே, அப் பாலை நிலத்து வழியாகவோ, நீ செல்ல நினைக்கின்றாய்? நாட்டுக் குடிமக்கள் அனைவரும் துயரத்தால் அல்லலுற்றுக் கதறக், கொஞ்சமும் முறைமையின்றி, அவர்கள் தேடி வைத்த பொருள்களைக் கவர்ந்த அரசு என்பதொன்று இருந்தால், அந்நாடுதான் எவ்வாறு இருக்கும்? கொலைக்கும் அஞ்சாத தீயோரால் செங்கோல் முறைமை திரிய, அரசு செலுத்தும் அந்த அரசனின் ஆட்சியிலே, மக்களின் வாழ்வு ஒரு வாழ்வாயிருக்குமா? அத்தகைய கொடிய ஆட்சியில் வாழ்வும் வளமும் கெட்டு வாடியழிந்து நாடு கிடப்பது போல, மரங்கள் முழுவதும் பட்டுப் பாழாகிக் கிடப்பதன்றோ, நீ செல்லும் பெருவழி! அவ்வழியிலே நீயும் போக முயல்கின்றாய். போய்ப் பொருளைத் தேடி வரவும் நினைக்கின்றாய். இதைப்போய் அவளிடம் நான் சொன்னால், அவள் என்ன பாடுபடுவாள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/33&oldid=822024" இலிருந்து மீள்விக்கப்பட்டது