பக்கம்:பாலைக்கலி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 33 ஊறு நீர் அடங்கலின், உண் கயம் காணாது, சேறு சுவைத்து, தம் செல் உயிர் தாங்கும் புயல் துளி மாறிய, போக்கு அரு, வெஞ் சுரம் - எல்வளை எம்மொடு நீ வரின், யாழ நின் 10 மெல் இயல் மே வந்த சீறடி, தாமரை அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போல, கல் உறின், அவ் வடி கறுக்குந அல்லவோ? நலம் பெறு சுடர்நுதால் எம்மொடு நீ வரின், இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் 15 துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய், மற்று ஆண்டை விலங்கு மான் குரல் கேட்பின், வெருவுவை அல்லையோ? கிளி புரை கிளவியாய்! எம்மொடு நீ வரின், தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த 20 வளி உறின், அவ் எழில் வாடுவை அல்லையோ? 6T60s ஆங்கு, அனையவை காதலர் கூறலின், 'வினை.வயிற் பிரிகுவர் எனப் பெரிது அழியாதி, திரிபு உlஇ; கடுங் குரை அருமைய காடு எனின், அல்லது, e 25 கொடுங்குழாய் துறக்குநர் அல்லர் - நடுங்குதல் காண்மார், நகை குறித்தனரே. "போர்க்குணம் மிகுந்தவனும் கட்டுக்கடங்காத சினம் கொள்பவனுமான ஒரு வேந்தன், சினங்கொண்டு, நெருப்பிட்டு அழித்தனன் பகைநாட்டு நிலத்தினை; அந்நிலம் போலப், பார்க்கச் சகிக்காமல் பாழாக விளங்குவது பாலை நிலம். காட்டுத்தீ பற்றிப் புதர்களும் பிறவும் எரிந்து போயின; எரிந்த கரிக்கட்டைகளையே எங்கும் காணலாம். தின்பதற்குத் தழை ஏதும் கிடையாது வாடியது ஒரு பெண் மான். பொரிகள் மலர்ந்ததுபோல உடலில் புள்ளிகளையுடையது அம்மடவான். நீர்வேட்கை மிகுதியால், முறுக்குண்ட கொம்புகளையுடையதன் ஆண் துணையோடு, கான்லையே நீரென எண்ணி ஒடிக் கொண்டிருந்தது. கள்ளிகள் கூட வாடிச் சாய்ந்திருக்கும், மலைகளும் வெப்பத்தால் கொதிப்படைய, அங்குள்ளவை அனைத்துமே கருகி விட்டிருக்கும். மரங்களை நம்பி வாழ்கின்றவை மந்திகள். அவை உண்பதற்கு எதுவும் கிடையாமற் போகவே, உடல் வருந்தி மெலியும். உரல் போன்ற கால்களையுடைய யானைகள், ஊறுகின்ற நீரூற்றுக்கள் எல்லாம் வறண்டு போய்விடவே, உண்பதற்கு ஒரு நீர் நிலையும் காணாமல், சேற்றின் ஈரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/41&oldid=822033" இலிருந்து மீள்விக்கப்பட்டது