பக்கம்:பாலைக்கலி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாலைக் கலி 37 மறந்தாய் போலும்? பொருளுக்காகவோ நீபோகின்றாய்? எம்மை வெறுத்துவிட்டாய் என்று வாதாடும் திறம் மிகவும் செப்ப முடையது. தலைவியே இவ்வாறு கூறி வாதாடுவதாகவும் கொள்ளலாம்; அதுவும் பொருத்தமாகவே இருக்கும். சொற்பொருள்: 1. அணை - தலையணை. பனை - மூங்கில். தட பெருமை. 2. துணைமலர் - இரண்டாக இணைந்து பூத்த மலர். வால் - வெண்ணிறம் வாய்ந்த, 4. இருங் கூந்தல் - கரிய கூந்தல். 8. இன்னாங்குப் பெயர்ப்பது - துன்பத்திடத்தே துரத்துவது. 9. துனி - வெறுப்பு. 10. யாழ : இசைநிறை. 1. மருளி கொள் - மயக்கம் கொண்ட 14 செம்மை - செந்நெறி. இகந்து ஒரீஇ கைவிட்டு நீங்கி, 17. மதித்தீத்தை - மதிப்பாயாக 18. கவவுக்கை கூடிவாழும் வாழ்வு. விட - விடுதலால். 19. அவவு - அவா, பொருளிடத்து ஆசை. மனும் நிலைபெற்ற. 14. போனால் வராது: ('பொருள் தேடிவரப் பிரிந்து போகின்றேன்’ என்றான் ஒருவன், தன் மனைவியின் தோழியிடம். அவள், அது கேட்டதும் பொருமுகிறாள். நீ போய்விட்டு வருவதற்குள் இவள் இளமைநலன் முழுவதும் தொலைந்துவிடுமே? அதனை நீ கொணரும் பொருள்தான் மீட்டுத் தருமோ? என்றும் கேட்கின்றாள்.) அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில் புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால் - இணைப் படைத் தானை அரசோடு உறினும் - கணைத் தொடை நாணும் கடுந் துடி ஆர்ப்பின், எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை 5 மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி, உருத்த கடுஞ் சினத்து, ஓடா மறவர், பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம் - புரிபு நீர் புறம் மாறி, போக்கு எண்ணி, புதிது ஈண்டிப் 10 பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ - செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம், அந் நலம் பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால்? பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ - 15 தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம், - பாம்டி (ః மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால்? பின்னிய தொடர் நீவி, பிறர் நாட்டுப் படர்ந்து, நீ மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/45&oldid=822037" இலிருந்து மீள்விக்கப்பட்டது