பக்கம்:பாலைக்கலி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கலித்தொகை மூலமும் உரையும் புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனா, 20 திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்குங்கால்? என ஆங்கு, அனையவை போற்றி, நினைஇயன நாடிக் காண்; வளமையோ வைகலும் செயலாகும்; மற்று இவள் முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த 25 இளமையும் தருவதோ, இறந்த பின்னே? சேனையணிகள் சூழ, அரசனே பெரும்படையுடன் வந்தாலும் அஞ்சமாட்டார்கள். சிலை மரத்தால் செய்த வலிமை மிகுந்த வில்லை வளைத்து, அதிலே முறுக்கமைந்த நாண் கயிற்றைப் பூட்டுவர். அவர்மீது கணைதொடுப்பது தம் வீரத்திற்குத் தகுதியற்றது என்று வெட்கங் கொண்டு, நாணைத் தெறித்து ஒலி எழுப்புவர். சிங்கக் குரலைக் கேட்டு விலங்கினம் சிதறி ஓடுவதுபோல. அவ்வொலிகேட்டே அரசோடு வந்த பெரும் படையினரும் முதுகுகாட்டி ஒடுவர். அத்தகைய கொடிய ஆற்றல் கொண்டவர், காட்டிலே வாழும் மறவர்கள். அவர்கள் ஆரவாரமாக வருவது கடிய துடியின் ஒலியோடு கேட்கும். வன்மைகொண்ட பார்வையும் வலி மிகுந்த கழுத்தும் உடைய கலைமானின் கொம்புகளைப் போல, அவர்களது தாடி முறுக்குண்டு திருகித் தாழ்ந்து தொங்கும். வெம்மையான கொடுஞ்சினம் உடைய அவர் செய்யும் தொழிலோ தனி வகையானது. வழியே வருபவரின் பொருள்களை எல்லாம் பறித்துக் கொண்டு, அவற்றுக்கு ஈடாகப் புண்களைத் தந்து போக விடுபவர் அவர். அன்பும் அருளும் அறவே இல்லாது போய்விட்ட அத்தகைய ஆறலைப்பாரை உடையதான கொடிய காட்டு வழி அது. அதனைக் கடந்து சென்று, பொருள் தேடியவனாக மீள்வதற்கும் எண்ணுகின்றாய். புறப்பொருளை விரும்பி, அகப்பொருளைக் கைவிட்டுப் போன நின் போக்கை எண்ணி இவளும் வாடுவாள். அசோகின் இளந்தளிர் போன்ற இவளது சிறந்த அழகெல்லாம் பசலையால் விழுங்கப்பட்டுவிடும். பழைய தன்மை ஒழிந்து இவள் தோற்றமும் மாறிவிடும். புதிதாக நீ தேடிக் கொணர்வேன் என்று சொல்லும் அந்தச் செல்வத்தால், போயின. இவளது எழிலை எல்லாம் மீட்டுத்தர முடியுமோ? இனிய ஒளியுடைய மதியை ஒத்தது இவள் அழகிய முகம், அந்த முகம் கிரகணம் பிடித்த சந்திரனைப் போலப் பசலை பாய்ந்து அழகழிந்து விடுமே! அவ்வாறு அழிந்தால், பொய்யற்ற கேள்வியால் உயர்ந்த சான்றோரைச் சார்ந்து நீயும் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/46&oldid=822038" இலிருந்து மீள்விக்கப்பட்டது