பக்கம்:பாலைக்கலி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * பாலைக் கலி 49 என்றெல்லாம் நான் சொல்லியும், நீர், மீண்டும் உன்னால் வரமுடியாத வெம்மை உடையது காடு என்றுதான் கூறுகின்றீர். எய்த கணைகளை மேற்செல்லாதவாறு தடுத்துநிற்கும் பாறைகள் சூழ்ந்த அந்தப் பாதையிலே, பருத்த கழுத்தும் அழகும் கொண்ட கலைமானின் பின்னர்ப் பிணையும் உடன் செல்வதை நீர் காணவில்லையோ? அவை எப்போதாயினும் தம்முட் பிரியுமோ? ஆதலின், எம்மையும் உம்முடன் அழைத்தே செல்வீராக. விளக்கம்: 'கிளிபுரை கிளவி என்றது, சொன்னதைச் சொல்லும கிளிப்பிள்ளைபோல, மீண்டும் மீண்டும் தான் சொன்னதையே அவள் சொல்லுபவள்’ என்பதைக் குறிப்பால் உணர்த்திற்று; இதனை மடம்' என்னும் பெண்தன்மை என்பர். சொற்பொருள்: 3. தண் நயந்து - குளிர்ச்சியை விரும்பி. 5. பக பிளவுபட 6. துணிகயம் - தெளிந்த நீரால் நிறைந்த குளம். தூங்கு அழல் - மிக்க வெப்பம்.7 கிளவி-சொல்; கிளத்தப்படுவது கிளவியாயிற்று. 8 தளி - மழைத்துளி உறுப அறியா - பெய்தலை அறியாத 17. நீள் நிழல் தளிர் - நீண்ட நிழலில் நின்ற மரஞ்செடி கொடிகளின் தளிர் நிறன் ஊழ்த்தல் - நிறம் கெடல். 18. தாள் நிழல் - தாளாகிய நிழல் - அதாவது பிரியாப்பேரருள். 22, பணை எருத்து பருத்த கழுத்து. - 20. இமைநொடியும் வாழாள்! ("என்றும் நினைப் பிரியேன்; அஞ்சாதே" என்று முன்னர்ச் சொன்னாய். இப்போழுதோ பிரிவேன்' என்கின்றாய். இவற்றுள் எதுதான் உண்மையோ? நிலையற்ற பொருளை விரும்புபவனாகி, இவள் தோள்நலனையும் நீ மறக்கலாமோ?” என்று கேட்கிறாள் தோழி) 'பால் மருள் மருப்பின், உரல் புரை பாவு அடி, ஈர் நறுங் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல் ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து, பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும் - அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே; 5 நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி, நின்னின் பிரியலன், அஞ்சல் ஒம்பு' என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே: அவற்றுள் யாவோ வாயின? - மாஅல் மகனே! 'கிழவர் இன்னோர் என்னாது, பொருள்தான், 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/57&oldid=822050" இலிருந்து மீள்விக்கப்பட்டது