பக்கம்:பாலைக்கலி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கலித்தொகை மூலமும் உரையும் பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்; அன்ன பொருள்வயிற் பிரிவோய் - நின் இன்று இமைப்புவரை வாழாள் மடவோள் அமைக் கவின் கொண்ட தோள் இணை மறந்தே. பால்போன்ற வெண்மையான தந்தங்களும், உரலின் அடிபோன்ற பாதங்களும், மணம்வீசும் மதநீரும் உடைய கொடுங்களிறு, தன் இனத்தைப் பிரிந்து, தனியாக மதங்கொண்டு நிற்கும். அவ்வழியாகச் சென்று வேற்றுநாடு போய்ப் பொருள் தேடுவதற்காகப் பிரிய வேண்டுமென்று நீயும் நினைக்கின்றனை! அதனைச் சொல்லவும் செய்கின்றனை எம்பால் அருள் அற்ற சொல் அதுவன்றோ? நன்மை தரும் அவளுடைய நறிய நெற்றியினைத் தடவியவாறே, உன்னை விட்டுப்பிரியேன், அச்சம் கொள்வதை விடுவாயாக’ என்று நன்மை தரும் சொற்களையும் முன்னர்க்களவுக் காலத்தே நீ சொல்லினையே! மயக்கத்தை உடையவனே! இவ்விரண்டனுள் எவைதாம் உண்மையானவோ? நீ சென்று தேட நினைக்கின்ற பொருளோ, தனக்கு உரியவர் இன்னார்தாம் என்று கருதாமல், அவரவர்க்குரிய பழைய நல் வினைகளையொட்டியே போவதும் வருவதுமாயிருக்கும் இயல்பினையுடையது. அதனை நீ சென்று முயற்சியாற் பெற்றுவிட விரும்பிப் பிரிந்து போவேன்’ என்பதுதான் நியாமோ? இமை மூடித்திறக்கும் நொடியளவும் உன்னைப் பிரிந்து வாழாத மடப்பம் உடையவள் நின் மனைவி. அழகு தவழும் அவளது இணையற்ற தோள்களை மறந்தோ நீ செல்ல நினைக்கிறாய்? அது தவறு ஐயனே, தவறு! விளக்கம்: அருளில் சொல்' என்றது, பிரிவேன் என்றால் அவன்படும் வேதனையை உணர்ந்தும் கூறியது.மாஅல் மகனே" என்றது, காம மயக்கத்தால் முன்னர் அவ்வாறு கூறுகிறாய் என்று, அவன் மயக்கத்தைக் காட்டுவதற்காகும். பழவினை மருங்கிற் பொருள் சென்று சேரும் என்றது, இப்போது நேரில் காண்பவர் நிலையையொட்டிக் காரணம் கூற முடியாததால், இதனாற் பொருளது நிலையின்மையும் கூறினள் ஆயிற்று. சொற்பொருள்:1.மருப்பு-யானைக்கொம்பு.2.ஈர்நறும் கமழ் கடாம் - ஈரமும் நாற்றமும் கொண்ட மதநீர். ஒருத்தல் யானைத்தலைவன். நீவி - கையால் தடவிக்கொடுத்து. 7. அஞ்சல் ஒம்பு - அஞ்சுதலைக் கைவிடுக9. வாயின் உண்மை உடையன. மாஅல் மகன் - மயக்கத்தை உடைய மகனே திருமால் மகனாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/58&oldid=822051" இலிருந்து மீள்விக்கப்பட்டது