பக்கம்:பாலைக்கலி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曾 * புலியூர்க்கேசிகன் திணை விளக்கம் 89. 3. தாழ்ந்தோர் புள் விலங்கு శ్రిEFt பறை யாழ் பண் தொழில் உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் (களமரும் - தொல் உரை கூறும்). வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், . பெருநாரை, கம்புள், குருகு, தாரா (தாராவும் நீர்க்கோழியும் - தொல் உரை). எருமை, நீர் நாய். பேரூர், மூதூர். யாற்று நீர், கிணற்று நீர் தாமரைப்பூ கழுநீர்ப்பூ காஞ்சி, வஞ்சி, மருதம். செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி, நெல்லரிகிணை, மணமுழவு. மருத யாழ். மருதப்பண். விழாச் செய்தல், வயற்களை கட்டல், நெல் அரிதல், கடா விடுதல், குளம் குடைதல், புது நீராடல். 5. நெய்தலின் கருப்பொருள்கள் தெய்வம் உயர்ந்தோர் தாழ்ந்தோர் புள் விலங்கு வருணன். சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, (மேலும் கொண்கன், துறைவன், மெல்லம் புலம்பன் என்பனவும் தொல் - உரை கூறும்). நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர் (திமிலரும் தொல் உரை கூறும்). - கடற் காகம் (அன்னமும் அன்றிலும் தொல் உரை). சுறாமீன் (உமண் பகடு போல்வன தொல் உரை). பாக்கம், பட்டினம். உவர்நீர்க்கேணி, கவர்நீர் (மணற்கிணற்று நீர், தொல் உரை).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/97&oldid=822095" இலிருந்து மீள்விக்கப்பட்டது