பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 உள்ளத்தில் மணக்கும் முல்லைச்சரம் கவிஞர் பொன்னடியான் திருச்சி மாவட்டச் செந்துரையில் பிறந்து, தமிழ் மறவர் பொன்னம்பலனாரால் உருவாக்கப்பட்டு, பாவேந்தர் கையில் பட்டை தீட்டப்பட்டவர் இந்தப் பொன்னடிக் கவிஞர். பள்ளிப் பருவத்திலேயே இனப் போராட்ட வீரராகத் திகழ்ந்தவர். பாவேந்தரின் இறுதி நாட்களில் அவர் மாணவராகவும், செயலாளராகவும், அணுக்கத் தொண்டராகவும் பணி புரிந்தவர். உருவத்தில் ஊசிமிளகாய் போல ஒல்லியான வர் காரமானவர். தமிழைத் தாய்மையோடும், உருசி யத்தைக் காதலோடும் பார்த்துப் பழக்கப்பட்டவர். அமுதும் தேனும்போல ஒராணும் பெண்ணும் பெற்று வளர்ப்பவர். பதின்மூன்று ஆண்டுகள் பிடிவாதமாகப் பாட்டிதழ் நடத்திக் கொண்டிருப்பவர். பாவேந்தர் விட்டுச் சென்ற கடைசிக் குழந்தையான தமிழ் கவிஞர் மன்றத்துக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் செவிலித்தாய் இவர். பாவேந்தரின் இலக்கியப் பூங்காவில் துடிக்கும் தும்பியாகப் பறந்து கொண்டிருந்த நாட்களில், அப்பாட்டு முல்லை தமது உள்ளத்தில் பரப்பிய மணத்தை இக்கட்டுரையில் அள்ளித் தெளித்திருக்கிறார். தமக்குத் தெரிந்ததையெல்லாம்...! தமக்குத் தெரிந்ததையெல்லாம் தம் மாணவர்கட்கும் தெரிவித்து விட வேண்டும்; தாம் கற்றதையெல்லாம் தம்முடைய