பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அந்தநாட்கள் என்னவென்றால் கிருபானந்தவாரியாரே விரும்பிக்கேட்டு என். தலைமையில் வந்து பேசினார். தமிழ் அவருடைய வாயில் கொஞ்சி விளையாடியது. முடிவுரையில் அவருடைய தமிழ்ப் புலமையும், பேச்சாற்றலையும் நன்கு பாராட்டிப் பேசினேன்” என்று பாவேந்தர் கூறினார். இந்த வேலூர்க் கூட்ட நிகழ்ச்சியைப் பற்றி வேறொரு கூட்டத்தில் கவிஞரிடம், “என்ன வாரியார் எப்போதும் முருகனைப் பற்றியே பேசி ஆத்திகப் பிரசாரம் செய்கிறார். நம்மையெல்லாம் (சுயமரியாதைக்காரரை) மேடைதோறும் திட்டுகிறார். நீங்கள் எப்படி அவரைப் பாராட்டிப் பேசலாம்?” என்று யாரோ எழுந்து கேள்வி கேட்டார்கள். இதைப் பற்றியும் பாவேந்தரிடம் கேட்டேன். "ஆமாம் கேட்டார்கள். நம்ம கட்சியிலே பேசினா நீங்க பணமா கொடுக்கறிங்க? அதனால பணம் கொடுக்கிறவர்கள் கூட்டத்திலே ஆதரிச்சுப் பேசுகிறார். அது அவர் பிழைப்பு என்று பதில் சொன்னேன்" என்று குறிப்பிட்டார். 20.3.62 இன்று மாலை பாவேந்தர் கலகலப்பாக இல்லை. தாம் எழுதிய ஒர் வண்ணப்பாடலைப் பார்த்துத் திருத்திக் கொண்டிருந்தார். இன்று எங்கள் பேச்சும் சுறுசுறுப்பாக இல்லை. பாவேந்தர் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவரே ஆர்வத்துடன் பல செய்திகளைச் சொல்வார். மற்ற நேரங்களில் நாம் கேட்டாலும் ஏதோ பதிலுக்குச் சில சொற்கள் சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்து விடுவார். அப்போது அவர் மனநிலை சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டு நான் எழுந்து வந்து விடுவேன். இன்று அவருடைய உள்ள (மன) நிலை மூட்டம் போட்டதுபோல தெளிவில்லாமல் இருந்தது. எனவே, அவர் இன்று கூறிய கருத்துக்களும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி இருந்தன. இன்று அவர் கூறியவற்றுள் இரண்டு செய்திகள் குறிப்பிடத்தக்கன. ஒன்று வண்ணப்பாவைப் பற்றியது. பாவேந்தர் கி.பி. 1919இல் திருப்புவனையில் ஆசிரியர் பணி செய்து கொண்டிருந்தார். மாணிக்கவாத்தியார் என்பவர் இவருக்கு மிகவும் வேண்டிய நண்பர். மாணிக்கவாத்தியாரின் உறவினர் ஒருவர் பத்து வண்ணங்கள் எழுதிப் பாவேந்தர் பார்வைக்கு அனுப்பி வைத்திருந்தார். நிறையப்பிழைகள். வண்ணப்பா அசை எண்ணி எழுத வேண்டும். ஒரிடத்தில் பிழையென்றால் எல்லாவிடத்தும் உதைக்கும். எனவே அப்பாடல்களைப் பல நாள் வைத்திருந்து,