பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 69 பலமுறை படித்துப் பொறுமையோடு திருத்தி அனுப்பினாராம். அப்போதிருந்து வண்ணப் பாவைப் பற்றி நன்கு ஆய்ந்து அதில் தாம் பயிற்சியும், புலமையும் பெற்றதாகப் பாவேந்தர் குறிப் பிட்டார். மற்றொரு செய்தி பாவேந்தரின் உடல்நலக் குறைவு பற்றியது. கி.பி. 1958-59ஆம் ஆண்டுகளில் பாவேந்தர் என்புருக்கி நோயினால் தாக்கப்பட்டார். சில நோய்கள் சிறு வயதில் வரும்போது தொல்லை கொடுப்பதில்லை, என்புருக்கி இளமையிலும், மஞ்சட் காமாலை முதுமையிலும் வந்தால் அவற்றில் இருந்து தப்பிப் பிழைப்பது கடினம். முதுமையில் தாக்கிய என்புருக்கி இவரை ஒன்றும் செய்யவில்லை. அந்நோய் இவருக்குத் துவக்க நிலையிலும் இருந்திருக்கலாம். புதுச்சேரியில் பிரெஞ்சு அரசாங்கப் பணியில் இருப்பவர்களுக்கு மருத்துவமெல்லாம் இலவசம். அரசாங்க மருத்துவமனையில் ஒர் அரசாங்க அலுவலர் சேர்க்கப்பட்டால் (அவர் ஒய்வு பெற்றவரானாலும் சரி) அவர் நோய் தீரும் வரையில் சம்பளத்தில் அல்லது ஓய்வூதியத்தில் 1/3 பங்குபிடித்துக் கொள்வார்கள். ஆனால் மருத்துவமனையில் நோயாளிக்குச் செலவிடும் தொகையைப் போல் பத்து மடங்கு இருக்குமாம். என்புருக்கி நோயினால் தாக்கப்பட்டபோது பாவேந்தரும் புதுவை அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு நாள்தோறும் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட முட்டைகளையும் பழங்களையும் தின்னமுடியாமல் வீட்டுக்குக் கொடுத்து அனுப்புவாராம். உடல் நலம் தேறி வீடு திரும்பியதும், ஒராண்டு ஒரு பிரெஞ்சுச் சமையல்காரன் இவருக்கு முறையாக உணவு சமைத்துப் போட்டானாம். பாவேந்தருக்கு என்புருக்கி வந்தபோது வயது 68, என்புருக்கி நோய் வந்து தப்பிப் பிழைத்தவர்கள் பிறகு மிகவும் எச்சரிக்கையோடு இருப்பார்கள். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் கூட இந்த நோயைச் சாக்கிட்டு அக்கொடிய பழக்கத்தை விட்டுவிடுவார்கள். ஆனால் பாவேந்தர் எதையும் விடவில்லை. சென்னைத்தியாகராயர் நகரில் இருந்தபோது இவர் சிகரெட்டும் சுருட்டும் மாற்றி மாற்றி ஓயாமல் குடித்துக் கொண்டிருப்பார்; போதாக் குறைக்குப் பொடியும் போடுவார். தாம்பூலம் சுவைக்கும் வழக்கமும் அவரிடம் அப்போது இருந்தது. 1. பாவேந்தர் என்னிடம் கூறும்போது தாம் என்புருக்கி நோயினால் தாக்கப்பட்டது 195859ஆம் ஆண்டுகளில் என்று குறிப்பிட்டார். அவர் புதுவையிலிருந்து நடத்திய குயில் ஏட்டில் 10.10.58இல் மார்புச் சளியின் காரணமாகப் புதுவைத் தலைமை மருத்துவமனையில்