பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அந்தநாட்கள் முதன்முறையாக ஒரு திருமணத்தில் சந்தித்தனர். மறவர் பாவேந்தரைப் பார்த்து, கணியிடை ஏறிய சுளையும்-முற்றல் கழையிடை ஏறிய சாறும் மலர் ஏறிய தேனும்-காய்ச்சுட் பாகிடை ஏறிய ருசியும் என்ற வரிகளை எடுத்துச் சொல்லி, "இதில் ருசி என்ற வடசொல். எதற்கு? ருசிக்குத் தமிழில் சுவை என்ற அழகான சொல்லிருக்கிறதே. 'பாகிடை ஏறிய சுவையும் என்றிருந்தால் நன்றாக இருக்குமே” என்று கூறினாராம். பாவேந்தர் அதற்கு ஒப்பியதோடு அடுத்த பதிப்பில் மாற்றியும் விட்டார். பொன்னம்பலனார் தொடர்பால் ஏற்பட்ட தனித் தமிழ்ப்பற்றுதான் தமிழியக்கம் என்ற அருமையான நூல் தோன்றக் காரணம். பொன்னம்பலனார் தொடர்புக்குப் பின் எழுதப்பட்ட எல்லா நூல்களுமே பிறமொழிக் கலப்பின்றி எழுதப்பட்டன. பாவேந்தர் நூல்களில் பயிற்சியுடைய எல்லார்க்கும் இவ்வுண்மை தெரியும். சித்ரநிகர் பெண்டிர்களைச் சீரழிக்கும் பாரத நற்புத்ரர்களைப் பற்றியன்றோ பூலோகம் தூற்றுவது! போன்ற மணிப்பிரவாள நடை, பாவேந்தரிடமிருந்து அடியோடு விடைபெற்றுச் சென்றுவிட்டது. பொன்னம்பலனார் தம் மகளுக்குக் கல்லூரியில் எம்.எஸ்.சி. படிப்புக்கு இடம் வாங்குவதற்காக வந்திருந்தார். வந்தவர் பாவேந்தர் வீட்டில் வந்து தங்கினார். அன்று இரண்டு தமிழேறுகளும் முக்காரமிட்டுக் கொண்டிருந்தன. அன்று சில சொல்லாராய்ச்சிகளும் நடந்தன. முவ்வுரம்' என்பது மும்மரம்' ஆயிற்றென்றும், மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றுமே முவ்வுரங்கள் என்றும் பாவேந்தர் கூறினார்; பஞ்ச பூதங்களையும் முகப்பது முகம்’ என்றும், கதுவுவது கதவு என்றும் பொன்னம்பலனார் சொன்னார். அன்று பேராசிரியர் நமச்சிவாய முதலியாரைப் பற்றி இருவரும் வியந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சிலிருந்து பேராசிரியர் நமச்சிவாய முதலியார் பற்றிச் சில அரிய செய்திகளை அறிந்து கொண்டேன். முதன் முதலாகப் பொங்கல் விழாவே தமிழரின் தனிப்பெரும் பண்டிகை என்பதைப் பேசியும், எழுதியும் கொண்டாடியும் அறிமுகப்படுத்தியவர் நமச்சிவாயரே. இவர் வாழ்ந்த நாளில் ஆண்டுதோறும் தம் வளமனையான கடலகத்தில் 1. கடலகம் நமச்சிவாயர் வீடு: வங்கக் கடலைப் பார்த்துக் கட்டியது. தற்போது இவ்வீடு அவர் குடும்பத்தாரிடம் இல்லை. இதில் உணவு விடுதி இப்போது உள்ளது. இது கடற்கரையில் சென்னை வானொலி நிலையத்திற்கு அருகில் உள்ளது.