பக்கம்:பிராயச்சித்தம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 95. பின்னல், நடனத்தில் முன்னும் பின்னுமாக வீசுகையில் அசல் பாம்பு போலவே நெளிந்து ஏமாற்றியது. தன்னை மறந்த ஒரு வெறியின் ப்ரபையின் ஒளி நடுவே தன் நர்த்தனத்தோடு ஐக்கியத்தில் மது தகதகத்தாள். 弥 拳 濠 இந்த சமயத்துக்கு நடராஜன். 凝 萃 ః

ேேதா கிருஷ்ண நடனத்தில் கிருஷ்ணப்ரேமியாகவே மது மாறிவிடுவாள்.

கிருஷ்ணா பேகனே பாரோ சுந்தரத்தில் குழைந்து உருவான ராதா கானா நடன நடன ரூப மதுரவாணி மிது மதுவிடம் அம்சம் இருந்தது. சந்தேகமேயில்லை, மதுவின் அழகை என்று அடையாளம் கண்டு கொண் டேன்? தொட்டிலில் ஆறுமாதக் குழந்தைமேல் ஒருநாள் ஆசையுடன் குனிந்தபோது, குழந்தை மூக்கிலிருந்து கண்ணாடியைப் பறிக்க முயன்று, மார்பிலும் உதைத் தாளே அப்போது. இதில் என்ன இருக்கிறது என்று என்னை இப்போது கேட்டால் எனக்கு மட்டும் சொல்லத் தெரியுமா? சூசகங்கள் கடைசிவரை சூசகங்கள்தாம். சற்று அழுத்திப் பிடித்தால் கசங்கிப்போம். இதழ்கள் பிய்ந்துகொள்ளும்.