பக்கம்:பிராயச்சித்தம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 101 நாளைக்கு பிஸ்கட் இல்லாவிட்டால் வனஸ்பதி, இல்லா விட்டால் மருந்து, மாத்திரை, டானிக், ஊசி-விற்பனை செய்துகொண்டு, முதலாளிக்கு செல்வத்தை சேர்த்துக் கொண்டு... காலாகாலத்தில் சாப்பாடு கிடையாது தூக்கம் கிடையாது; ஞாயிற்றுக்கிழமை கிடையாது; நாள் பண்டிகை இல்லை; ஒய்ச்சல் கிடையாது; ஒழிவு கிடையாது. எப்பவும் வேலைதான். அதுவே மூச்சு. என்றைக்கு வயிற்றில் அல்சர் வைக்கப் போகிறதோ, குறிக்கோளே இல்லாமல் இப்படியே செத்துப்போய் விடுவேனோ? இதில் எந்த மட்டும் சுயம்? எந்த மட்டும் கழிவிரக்கம். தெரியவில்லை. வாழ்க்கை பொதுவாக வெட்கம் கெட்டுப் போய்விட்டது. பகலில்லை. இரவில்லை. சமயங்களில் ஒட்டலில் இலையில் உட்கார்ந்து, கையிலெடுத்த கவளம் வாய்க்குப் போகு முன் ஒரு முகம் மனதுள் இடைமறிக்கும். என்னை இங்கிருந்து அழைச்சுண்டு போயிடுங்களேன்! அப்புறம் அந்தச் சோறு விஷம்தான். இலையை விட்டு எழுந்துவிடுவான். கன்னத்தை அடிக்கடி தொட்டுக்கொள் வான். அன்றைய அவள் அனல் மூச்சில் கன்னம் கன்றிப் போயிருந்தது. ஆகவே, அடுத்தமாதம் தர்மராஜன் அந்த கிராமத் துக்கு வியாபார ரீதியில் அவசியமில்லாது திரும்பிய போது, கொஞ்சம் தூக்கததில் நடப்பவன் நிலையில் இருந் தான் என்று உவமை பாஷையில் சொல்லலாம். முழுக்கவும் அதில் தன்னிச்சையில்லை. அவரைச் சுற்றிலும் அவர்மேல் தன்னைத்தானே நூற்றுக்கொண்ட ஒரு வசிய சக்தி படர்ந்திருந்தது. நாள் கழித்து மாட்டிக்கொண்டால்