பக்கம்:பிராயச்சித்தம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வா. ச. ராமாமிருதம் இந்தச் சமயம் டூர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலேயே நீடித்துவிட்டது. மதுவுக்குப் போட்ட இரண்டு கடிதங்களுக்குப் பதில் இல்லை. துண்டில் விளையாடு கிறார்களா? இன்னொரு மோதலுக்கு ஆயத்தம் ஆகனுமா? உள்ளுர பீதிதான். வியாபாரத்தில் கூட ஏறக் குறைய நாணயம் உள்ளவர்களுடன் எனக்குப் பழக்கம். மானத்தை விட்ட பெண்பிள்ளையைச் சமாளிக்க என்னாலாகாது. தங்கமுலாம் பூசிய இரும்புக்கவசம் என் பலவீனம்" என்னைவிட நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாள். மதுவைக் காப்பாற்றியாகனுமே! வேணுமென்றே தான் திரும்புவதை முன்கூட்டி அறிவிக்கவில்லை. மாலைவேளை வீட்டுள் நுழைந்தபோது கூடத்தில் சோபாசெட்டில் அவர் குடும்பத்துடன் மூன்றாவது ஆள் காப்பி அருந்திக் கொண்டிருந்தான். தர்மராஜனைப் பார்த்ததும் அந்த ஆள் எழுந்திருக்கக்கூட இல்லை. 'ஹல்லோ ஸார், என்னை நினைவு இருக்குதா?” "ஐயோ மறக்க முடியுமா என்ன? ப்ரேமரதம்" இன்னும் முட்டி வந்து சேரல்லியா?" 'ஒ, தாங்க்யூ-சரி வர்ரேன். அப்புறம் பார்க்கலாம் அம்மா-' மரகதம் சமாதானம் சொல்ல முன்வரவில்லை. தர்மராஜனும் கேட்டுக் கொள்ளவில்லை. அன்றிரவே ஒரு முடிவுக்கு வந்தார். மறுநாளே தன் வேலையை ராஜிநாமா செய்தார். ஒரு மேஜை வேலையாகத் தேடத் தலைப்பட்டார். கொஞ்சம் சிரமம்தான். ஆனால் அவருடைய கம்பெனி டைரக்டர் சிபாரிசிலேயே ஒரு தனியார் வங்கியில் சேர்த் தார்.