பக்கம்:பிராயச்சித்தம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 109 காய்ச்சிப் பிழைப்பு: இதில் கவுரவம் என்ன வேண்டிக் கிடக்கு. இங்கே என்ன கொட்டிக் குவிச்சா கிடக்கு எல்லாருக்கும் சினிமா சான்ஸ் வாசலுக்கு வந்து கதவை பிடிக்கிறதா? பி ைழ க்க த் தெரியாதவனுடன் என் முடிச்சைப் போட்டிருக்கு. வேளையைப் பணம் பண்ணத் தெரியாத மனுஷன் என்ன மனுஷன்? மானமாம், கெளரவமாம், குடும்பமாம். அது அது வேளா வேளையில் நடக்கணுமாம். தட்டிக் கழிக்கிற சாமாச்சாரம். கலியானம் வேளை வந்தால்தானே ஆறது. ஆண்டாள் -மே க் க ப் பை இன்னும் கலைக்க வில்லை. முன் கொண்டையுடனும் தரையில் புரளும் திண்டு மாலையுடனும் இருவரையும் மாறி மாறி பார்த் துக்கொண்டு நின்றாள். அந்தப் பார்வையில் திகைப்பா, ஏளனமா? பயமா? ஆண்டாள் யார் பக்கம்? கண்டுபிடிக்க முடியவில்லை. ఫి. 露 球 மறு நாளே காம்ப் இருந்தது. கடகடத்துப் போன தன்னை ஒன்று சேர்த்துக் கொள்ள அவகாசம் கிடைத்தது.” - தர்மராஜன் தன் வாழ்க்கையில் விரிசல் கண்டு விட்டதை உணர்ந்தான். ஏமாந்து போனேன். இன்று அல்ல, அன்றே இவளுடைய கிராமத்தில், இவள் வீட்டில் ராத்திரி சாப்பாட்டுக்குப் பின் கையலம்ப புழைக் கடைக்குப் போனபோது, கிணற்றடியில் வழுக்கிவிட்டதே, அப்போதே வகையாக மாட்டிக்கொண்டேன். வீட்டுக்குள் ககதி வந்தாச்சு. மகளும் தாயும் எனக்கு எதிர். ஆமாம் இதென்ன வேடிக்கையாயிருக்கிறதே. இந்த அளவுக்கு விவரம் தெரிய மதுவுக்கு வயதாகவில்லையா, புத்தி யில்லையா?