பக்கம்:பிராயச்சித்தம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 லா. ச. ராமாமிருதம் நாற்காலியில் முள் ஏறினா ற்போல் அப்போதுதான் தர்மராஜனுக்கு முழு விழிப்பு முழுத் தெளிவுடன் வந்தது. கண்ணிலிருந்து திரை கிழிந்த தெளிவு. இனி இந்த விழிப் புக்கு கண் மூடல் இல்லை. மூடல் முடியாது, அன்று இரவு அப்பாவும் அம்மாவும் பெருத்த மோதல். மரகதம் ஸ்வரூபம் எடுத்ததும் தர்மராஜன் அதிர்ந்து போனார். பட்டணத்தில் குழாய் பாஷை என்கிறோம். கிராமத்தில் படித்துறை பாஷை என்பதா? இத்தனை வருஷங்கள் அவர்களிடையே சண்டை சச்சரவு வாக்குவாதம் வந்ததில்லையா? ஆனால் இதுமாதிரி மனைவி கோதாவில் இறங்கிப் பார்த்ததில்லை. இது ஒரு முகமூடிக் கலைப்பு. மூச்சு வாங்கக்கூட தடை படாத அந்த வார்த்தை வெள்ளம். எக்கச்சக்கப் பிரசங்கம், மட்டு மரியாதையின் கட்டிடச் சரிவு, உனக்காச்சு எனக்காச்சு. இந்த முதல் தாக்குதலி GaoGu få sigšgsstil- Gausst Giò. Count-one-twothree four என்கிறமாதிரி முரட்டுச் சொல்லடி-அந்தப் புயலுக்கு தர்மராஜனால் எதிர்கொள்ள முடியவில்லை. செவிகளைப் பொத்திய வண்ணம் நாற்காலியில் உட்கார்ந்து விட்டார். அப்புறம் செவியில் இறங்கின. அத்தனை கக்கல், கரைசல், வண்டல், வாடை, சாக்கடை, உடைப்பை வடி கட்டினால் மரகதத்தின் வாதத்தின் சாராம்சம், இந்தக் காலத்தில் பெண்களுக்கு அவ்வளவு சுருக்கக் கல்யாணம் ஆகிவிடுகிறதா? அந்த நாளிலேயே நான் எத்தனைக் காத்திருந்தேன். காத்திருந்தும் என்ன? புதையல் குழியில் விழுந்து விட்டேனோ? அன்னாடம்