பக்கம்:பிராயச்சித்தம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் Í Í Í எப்படியும் இப்போது தான் உள்ளூரிலேயே ஸ்திர மாகத் தங்கிவிட்டதால் இவர்களுடைய தனிக்காட்டுத் திரியல் கட்டுப்படும் அல்லவா? என்று எண்ணம். கோமதி அவருக்குப் பின்தான் வேலையில் சேர்ந்தாள். அவள் திறமையைச் சோதித்து அவர்தான் அவளைத் தேர்ந்தெடுத்தார். அவளுடைய நன்றி காரணம் இதோ இன்றும் என் தலைக்குமேல் ஒரு கூரை; என்னைக் காக்கிறது. அந்தப் பழக்கச் சாக்கில் கோமதி அவர் வீட்டுக்குச் சில முறைகள் வந்திருக்கிறாள். அந்த முறையில் அவளுக்கு மாமியோடும் தன் வயதுக்காரி மதுவோடும் மேலெழுந்த வாரியான பழக்கமுண்டே தவிர குடும்பத்துக் குமுறலை அவர் அறிய நியாயமில்லை. 'இரண்டு புலிகளும் ஒரு புலிக் குட்டியும் ஒரு கூட்டில் சுற்றிச் சுற்றி வளைய வந்தன; அடிபட்ட ஆண்புலி தன் காயங்களை நக்கிய வண்ணம்." வெளியிலேயே பழக்கமாயிருந்து விட்டபின் ஸ்திரமாக ஒரே இடத்தில் காலை 10 மணியிலிருந்து மாலை ஐந்து வரை சிறைப்பட்டு வேலை செய்வது சிரமமாயிருந்தது. சாதனைகளுக்குச் சந்தர்ப்பமில்லாமல் பக்கங்களில் கூட்டிக் கழித்து, பெருக்கி வகுத்துக் கொண்டிருப்பது என்பது சுலபமான ருட்டீன் அல்ல. இருந்தாலும் குடும்பம், கெளரவம் என்று காப்பாற்றியாக வேணடும். பெண்ணுக்கு வரன் சுறுசுறுப்பாகப் பார்க்க ஆரம்பித்தார். மனைவி, கடிவாளத்தைத் துப்பிய குதிரையாகி விட்டாள். ஆனால், மகளைக் காப்பாற்றியாகணும். வருமானம் இறுகிக் கொண்டது. டுரிங்கில் மாதச்சம்பளம் தவிர தன் பணமோ, கம்பெனிப் பணமோ, வசூல் பணமோ தினப்படி பேட்டா கமிஷன். டார்ஜெட்டை மீறி