பக்கம்:பிராயச்சித்தம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 9 சைக்கிள் ரிக்ஷாவில் ஒருவர் மேல் ஒருவர் இடிக்காமல் இருவர் உட்காரவே முடியாத நிலையில் அவர் தனிப்பட முயலும் அவஸ்தையைப் பார்க்கச் சிரிப்பாய் வந்தது. ஆனால் அவள் சிரிக்கவில்லை. இருவருமே பேசவில்லை. ஒரக் கண்ணால் கவனித்தாள் ஏற்கெனவே அவளுக்கு இருந்த ஒரு பிரமைப்படி அதை அவரிடம் அவளும் தெரிவித்திருந்தபடி, கானல் எப்போ கரைந்து போகுமோ? காக்கா ஊஷ்! இந்த சமயம் அந்த எண்ணமே அவளுக்கு ஒரு திகிலாயிருந்தது. 'இதோ இங்கேதான் நிறுத்திக்கோப்பா.' அவர்கள் இறங்கினதும் பையன் உள்ளிருந்து ஓடி வத்தான். அவரைப் பார்த்து ஒரு கணம் திடுக்கிட்டு மறுபடியும் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டான். 'அம்மா அம்மா, ரோஸி ஓடிப்போயிடுத்து அம்மா! என்னைத் திமிறிண்டு போயிடுத்து.' 'கடிச்சுதா?’ பதறினாள். 'இல்லியே! விழித்தான் அவன் உடல் பூரா தடவி, உறுதிப்படுத்திக் கொண்டபின், 'விட்டது சனி போ! உனக்குப் பிடிச்சதா ஒண்ணு வாங் கி ண் டு வந் திருக்கேனே! பார்சலை அவன் முகத்துக்கெதிரே நீட்டி அவன் அதை எட்ட வந்தபோது, உயரத் தூக்கிக்கொண் டாள். அப்புறமா, அப்புறமா, மாமாவுக்கு நமஸ்தே சொல்லு.' 'பரவாயில்லை பையா, உன் பேர் என்ன?” 'ப்ரலாந்த்." 'ஓ ப்ரஸ்ாந்த்' அவருக்கு சாதாரணமாக அந்த வயதுப் பையனைச் செல்லம் கொண்டாடப் பிடிக்காது. ஆனால் இப்படித்தானே மாட்டிக் கொள்கிறோம்! 'வாங்கோ லார் உள்ளே, சீன பாஷையில் விருந் தாளியை வரவேற்கும்போது, தன் அரண்மனையையே குடில் என்பான். ஆனால் இது உண்மையிலேயே குடில்.’