பக்கம்:பிராயச்சித்தம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 லா. ச. ராமாமிருதம் 'நாராயணன் என்பது சர்மன்.' முனகினான். 'அழைப்பது நரேன்.' "சரி, நான் நகையை எடுக்கவில்லை என்றால் நீ நம்பப் போவதில்லை. எடுத்தேன் என்றால் ஒப்புக் கொண்டதாகி விடும். என்ன செய்யலாம்? பணமா ஏதேனும் கொடுத்து...' கோபிச்சந்த் கொடுத்த செக் ஞாபகம் வந்தது. "எவ்வளவு கொடுப்பீங்க?" பெருமூச்செறிந்தார். 'ஊஹாம். பிரயோசனமில்லை. சரிப்பட்டு வராது. Blackmai; பண்ணுகிறவனுக்கு உள் எலும்பு கண்ணில் படுகிறமாதிரி சதையை உரித்தாலும் திருப்திப்பட மாட்டான். ஒ, நரேன், நான் உரக்கச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எதையும் ஒப்புக்கொள்ள வில்லை. 'ட்ராமா பண்.நீங்க, பண்ணுங்க. கேட்டுக்க வேண் டியது என் வேலை." "ஆமாம் நரேன், என்னிடம் நகையிருக்கிறது என்று எப்படி அவ்வளவு நிச்சயமா யிருக்கிறாய்?" 'பின்னே எங்கே போக முடியும்? திருட்டு நகை கைத் மாறினாலும், உருக்கினாலும் தெரியாமல் கேள்வன்து. அதுக்கு ஆளுங்க இருக்காங்க. அதனால் எங்கே தகை போக முடியும்? எங்கே... யோசனையில் குரல் இழுத்தது. சட்டென அவன் கண்கள் அகல விரிந்தன. 'you...you-ஆவேசத்தில் எ ழு ந் து நின்றுவிட்டான். அறையில் ஒரு சிலர் அவனைக் கவனிப்பது கண்டு உட்கார்ந்து கொண்டான். உதட்டோரத்தில் எச்சில் கொப்புளித்தது. அவருக்குப் புரியவில்லை. என்ன ஆச்சு? நெற்றியில் அடித்துக்கொண்டான்.