பக்கம்:பிராயச்சித்தம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 லா. ச. ராமாமிருதம் "தெரியும். கற்றுக்கொடுத்தவன், கற்றுக் கொடுத்த பின் முதலடி எனக்குத்தான். ஐயா, அடியை முறையாப் படுத்தணும்னா அதை நல்லாப் புரிஞ்சுக்கணும். நரம்புகள் உள்ளே சுருண்டுகொள்ள ஆரம்பித்திருக்கின்றன. அப்புறம் படிப்படியாகத்தான் விடுபடும். அதுவரை அனுபவித்துத்தான் ஆகணும். இதற்கு நீ ஏதேனும் சிகிச்சை செய்ய முற்பட்டாலும் ப்லன் இல்லை. சிகிச்சை செய்ய வேண்டாம். பேசாமல் உன் அறைக்குப் போய் ரெஸ்ட் எடு. தானா, படிப்படியா விட்டுவிடும்.' 'ஸார் தாங்க முடியல்லே!" "ஆமாம் நாம் இனி இங்கு இருப்பது உசிதமில்லே. ஸெர்வர், பில்: ' பில்லை அவர்தான் கொடுத்தார். ஹோட்டல் வாசலுக்கு வந்து படியிறங்கினதும் ஒட்டமும் நடையுமாக மாறி மாறி அவன் தன் கையை மறு கையால் பற்றிக் கொண்டு ஓடினான். அவர் அவனைப் பார்த் துக்கொண்டு நின்றார். “என்ன லார் ஆயிடுச்சி அவருக்கு: தேள் கொட்டி விட்டதாம்.' "தேளா? இங்கே தெருவிலா? என்ன ஸார் கேலி பண்றிங்க??? கையை விரித்து உதட்டைப் பிதுக்கினார். 'வீட்டிலிருந்து வரும்போதே ஜேபியுள் இருந்திருக், கிறது’ என்றார்.