பக்கம்:பிராயச்சித்தம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு வந்து சேர்ந்ததும் தர்மராஜன் படுக்கையில் பொத்தென விழுந்தார். கொல்லும் போலும் ஒரு அசதி. ஒரு பெரும் பருந்து மார்மீது இறங்கி தன் கொக்கிப் பாதங்களில், உடலைப் பற்றித் தூக்கிக்கொண்டு பாறை மேல் தன் கூட்டுக்குப் பறந்து செல்வதுபோல் தற்செய லிழந்த ஒரு அந்தர நிலை. மார்பில் கனம் அழுத்திற்று. கண்கள் மூடிவிட்டன. இன்று வெளியே புறப்பட்ட நிமித்தம், ஆ...நினைவு வருகிறது. வங்கிக்குப் போய் லேட்டின் மருமான் கொடுத்த காசோலையில் புதுக் கணக்குத் திறக்கணும். பழைய வங்கிக்கும் போய், Fixed Deposit ஐப் பெறுவதற்கு விசாரிக்கணும். ஆனால் கோ ம தி யி ன் கணவனைச் சந்தித்ததில் நாளே வீணாகிப் போனது. போகட்டும். எத்தனையோ நாட்களுடன் இந்நாளும் ஒருநாள். ஆமாம் என் வாழ்நாளில் மீட்கத் தொலையாத நாட்கள்! இவனுடைய அத்தியாயம் இத்துடன் முடியும் என்று தோன்றவில்லை. போலீஸ் கணிப்புக்கு ஈடாக இவன் ஏற்பாடுகள் இருக்கும் போலத் தோன்றுகிறது. ஒடிக் கொண்டேயிருப்பதுதான் என் ஜீவிதமா? தப்பு நேர்ந்து விட்டால் பிராயசித்தமே கிடையாதா? மூச்சு விட்டுக்