பக்கம்:பிராயச்சித்தம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 167 வெட்டில் தீர்த்துவிடுவார்கள். தர்மராஜன் நின்று விட்டார். பயம் தெரியவில்லை. அதற்குப் பதில் ஒரு விதமான உற்சாகம், ஒரு மட்டற்ற மகிழ்ச்சி. இப்போது நான் உயிர் இழக்க நேர்ந்தாலும் அதற்கு ஒரு ஸ்துல மான, என் மனதுக்கே திருப்தியான காரணம், சமாதானம் இருக்கும். மூன்றுபேரும் சற்று எட்டினாற்போலவே அவரைச் சூழ்ந்து நின்றனர். நடுவிலவன், 'ஐயா, வணக்கமுங்க!” ஆச்சர்யப்பட்டுப் போனார். இதென்ன மரியாதை தாக்குதலா? அப்படி ஒரு பாணி புதிதாக அமுலுக்கு வந்திருக்கா? "அமீர் பாய் நலமாயிருக்காங்களா?' ஆச்சர்யத்தின் மேல் ஆச்சர்யம். அமீர்க்கானை எனக்குத் தெரியும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” "இன்னிக்கு நரேன் ஐயாவைப் பார்க்கப் போனேன். அவர் கை தொங்குதே! அது சொல்லுதே,’’ "என்ன சொல்லுது?" "அது அமீர்பாயின் கையெழுத்துங்க." ஏதோ, புரிகிறமாதிரி, .ெ க | ஞ் ச ம் கொஞ்சம் வெளிச்சம்... 'இது அமீர்பாயின் நேர் அடியாயிருந்தால் அவர் ஜெயிலிலிருந்து வந்துட்டார். ஆனால் அவர் இன்னும் வல்லீங்க. ஆனால் இந்த அடியை அவர் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தால்... அமீர்பாய் எல்லாருக்கும். சொல்விக் கொடுக்க மாட்டார். அப்போ நீங்க அமீர் பாய்க்கு ரொம்ப வேண்டப்பட்டவராயிருக்கணும். அமீர் பாய்க்கு வேண்டப்பட்டவர் எங்களுக்கும் வேண்டப்பட் டவர். கை எப்படித் தொங்கிப் போச்சுன்னு நரேனை