பக்கம்:பிராயச்சித்தம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 லா. ச. ராமாமிருதம் விசாரிச்சேன். உங்களைப் பத்தி சொல்லி, உங்கள் வில்ாசமும் சொல்லி, உங்களைக் கவனிக்கவும் சொன் SRfr ff. * * "கவனிப்பதா?’’ "ஆமானுங்க. பதில் சற்றுத் தயக்கத்துடன், கூடவே கேலி கலந்து, அதாவது ஐயா மேலே கை வைக்கக் கூடாது. ஆனால் உங்களுக்குப் பயம் காணற மாதிரி செய்யனும், நான் விசாரிச்சுப் பாத்துக்கலாம்னு சும்மாத் தலையாட்டிட்டு வந்துட்டேன். ஆனால் அமீர்பாய்க்கு வேண்டப் பட்டவர்னா எங்களுக்கும் வேண்டப்பட்டவர். உங்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து வரோம்.' 'ஏன், நேரிடையாக என்னோடு பேச வேண்டியது. தானே? தொடருவானேன்? 'இதெல்லாம் சொல்லிக்க முடியாதுங்க. நீங்க எப்படிப்பட்டவர்னு முன்னாலே தெரிய வேணாமா? எடுத்த உடனேயே இந்த அடியை வாங்கிக்கிட்டா நான் என்னாத்துக்கு ஆறது? அதனால்தான் துணையோடு வந்தேன்.” தர்மராஜனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. நால்வரும் சற்றுநேரம் மெளனமாயிருந்தனர். அவன் சற்றுத் தயக்கத்துடன் 'ஆனால் ஒண்ணு. விளங்கல்லீங்க இருந்தாப்போல இருந்து ஏன் திடீர்னு: ஒட ஆரம்பிச்சீங்க? பேய் பிசாசு ஏதோ துரத்தின மாதிரி: அப்பிடி ஏதேனும் உங்கள் கண்ணுக்குப் பட்டுதா? அதெல் லாம் இருக்குதுங்க. இல்லேன்னு சொல்றவங்க பார்க்காத வங்க, உண்மை தெரியாதவங்க. இல்லே எங்களைப் பார்த் துட்டீங்களா? இல்லே நீங்க அவ்வளவு சுலபமாக எங்களைப் பார்த்திருக்க முடியாதே! நாங்க உஜாராத் தானே இருந்தோம்! எதைப் பார்த்து பயந்துட்டீங்க?"