பக்கம்:பிராயச்சித்தம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 லா, ச. ராமாமிருதம் பத்து வருடங்கள் ஒடியாடி அலைந்து வேலை செய்து, வயதுக்கு ஒய்வு பெற்று, ஒண்டியாகச் சென்னைக்கு திரும்பிய சீக்கிரத்தில் தற்செயலாகக் கோமதியை அவள் இப்போது உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் சந்தித்தேன். கோமதிக்கு இப்போது கலியாணம் ஆகிவிட்டது. ஆனால் அவளுக்குக் குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷடமில்லை. ஒரு லேட்டிடம் தன் நகையை அடகு வைத்து அதன்மேல், ரூ. 5000 கடன் வாங்கியிருந்தாள். கோமதியை சந்தித்த முதல் நாளிரவு எனக்குத் தம்பி முறையாகும் மணியைக் கோவிவில் சந்தித்தேன். கோவிலுக்குக் காரணமாகத்தான் போயிருந்தேன். இவள் எங்கள் குல தெய்வமாச்சே! எங்கள் குடும்பம் பரம்பரை யாக பூசை செய்பவளாச்சே! அன்றே தற்செயலாக, ஒரு தினசரித் தமிழ்ப் பத்திரி கையில் விளம்பரம் ஒன்று பார்த்திருந்தேன். மனக்சந்த் ஸ்ர்க்கார் தனக்கு சமையல் செய்ய ஆள் தேவையென்று விளம்பரம் கொடுத்திருந்தார். அதே மனக்சந்த் சர்க்கா ரிடம்தான் கோமதி நகையை வைத்திருந்தாள். கோமதி விவரங்களைத் தெரிந்துகொண்டு இரவு என் அறைக்குத் திரும்பினதும், என் மூளை வேலை செய்யத் தொடங்கிற்று. அதனுடைய வேதனையே அதுதான். துரங்குகிற சமயத்தில் கூட மூளையினால் வேலை செய்யா மல் முடியாது. என் விஷயம் இந்த நிலைமைக்கு வந்ததே அதுதான் காரணம். இதே அடிப்படையில்தான், நான் விளம்பரத்தைக் காட்டி மனக்சந்த் சர்க்காரிடம் சமையலுக்கு அமர்ந்தேன். பொதுவாக நோட்டம் பார்க்கலாம் என்கிற எண்ணத்தைத் தவிர அப்போது திட்டமாக ஒரு வடிவமும் மனதில் ஏற்பட வில்லை. மனச்சந்த் சர்க்கார் வளர்த்துக் கொண்டிருந்த ஜூலி எனும் தாய் நான் எதிர்பாராத