பக்கம்:பிராயச்சித்தம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 171 திருட்டுத்தான். நான் திருடினேன். சட்டத்தின்படி, தண்டனையை அனுபவித்தாயிற்று என்றாலும் மனிதச் சட்டம், நியாயம் இவைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட உண்மையொன்று இருக்கிறது. அதன் படிவங்கள் எதிரே இப்போது நிற்கிறேன். அதன்படி நான் திருடின காரணத் தையும் சொல்கிறேன். கோமதிக்கு என்னால் முடிந்த உபகாரத்தைச் செய்ய வேண்டும் என்று அவள் நகையை எடுத்தேன். ஆனால் என் திட்டம் அவளுக்குத் தெரியாது. சிறையிலிருந்து வந்த பிறகுதான் ஒரளவுக்கு விவரங்களை அவளிடம் சொன்னேன். என் செயலில், அதன் முன்னும் பின்னும் எந்த விதத்திலும் அவள் உடந்தையே அல்லள், எத்தனை தடவை வேனுமானாலும் அடித்துச் சொல்கிறேன். கதையை சாங்கோபாங்கமாகச் செல்ல நேரமில்லை. அவசியமில்லை. ஆனால் தொட வேண்டிய இடங்களில் தொட்டுத்தான் ஆகவேண்டும். அதன்படி நான் சின்ன வயதிலேயே என் பெற்றோர்களை இழந்தேன். மணியின் தகப்பனார்தான் என்னை எடுத்து வளர்த்து எனக்கு உயிர்ப் பிச்சையிட்டவர். அவர் எனக்குப் பெரியப்பா. எங்கள் குடும்பம் பரம்பரையாக இந்தக் கோவிலில் அர்ச்சகர் வேலை பார்த்து வருகிறது. பெரியப்பாவிடம் ஜாதித் தொழில்படி தெய்வ ஆராதனைக்கு வேண்டிய ஸ்மஸ்காரங்களைக் கற்றுக் கொண்டேன். ஆனால் அந்தத் தொழிலில் நான் இல்லை. உத்யோக ரீதியில் என் பிழைப்பைத் தேடி வெளியூர் சென்றுவிட்டேன். பல வருடங்களுக்கு, என் வயதில் பாதி கழியுமுன் இந்தப் பக்கம் திரும்பவேயில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக திரும்பி செய்யும் வேலையை விட்டு, வேறு வேலைக்கு அமர்ந்த இடத்தில் கோமதியும் வேலை செய்து கொண்டிருந்தாள். கொஞ்ச காலத்துக்குப்பின் குடும்ப சூழ்நிலையில் அந்த வேலையை விட்டு ஊரே மாறிப் போனேன்.