பக்கம்:பிராயச்சித்தம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நகை விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாரும்-கோம்தி, நரேன், இன்ஸ்பெக்டர் ஸார், மனக்சந்த் சர்க்காருக்குப் பதிலாக அவருடைய மருமான்எல்லாரும் நான் கேட்டுக் கொண்டபடி இங்கு சேர்ந்திருக் கிறீர்கள் நல்லது மணி, உனக்கும் இந்த விஷயத்துக்கும் நேரிடையாக சம்பந்தமில்லையானாலும் நான், நீ அறியா மலே இதில் உன்னை உபயோகப்படுத்தியிருக்கிறேன். இன்ஸ்பெக்டர்: கோமதி அம்மாள், நீங்க இங்கே வரச் சொன்னிங்கன்னு சொன்னாங்களேத் தவிர வேறு ஏதும் சொல்லவில்லை. கோபிச்சந்த். எனக்கும் அவ்வளவேதான் தெரிவிச் சாங்க, - - چه هستم. தர்மராஜன்: பரவாயில்லை. இப்பத்தான் நான் படியைத் தலைகீழாகக் கவிழ்க்கப் போறேனே! ஒரு விஷயம் தான் இப்போது சொல்லப் போவதற்கெல்லாம் நான்தான் சாசுதி. நான் சொல்வதைத்தான் நீங்கள் நம்பி யாகணும். நம்புவீர்களோ, மாட்டீர்களோ, ஏற்றுக் கொள்வீர்களோ மாட்டீர்களோ, என் வரையில் நான் .உண்மையைத்தான் சொல்கிறேன். நடந்ததெல்லாம் நடந்: தாச்சு, இந்தக் கூட்டத்தை நான் கூட்ட வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் எதிரே பஞ்சாயத்துக்கு நான் நிற்கவில்லை. ஆனால் சொல்லவேண்டியதைச் சொல்லி என் பிராயச்சித்தத்துக்கு எனக்குத் தெரிந்த வழி இதுதான். நகையை எடுத்தவன் நான் தான். எனக்காக எடுக்க வில்லை என்று என்னப் பூச்சுப் பூசினாலும் திருட்டு,