பக்கம்:பிராயச்சித்தம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விராயச்சித்தம் 173 அம்சம். ஆனாலும் அதை ஒரு அம்சமாக நினைக்க அப்போது தோன்றவில்லை. மேலும் சிக்கல் நான் பழகிய இரண்டு மூன்று நாட்களுக்குள் ஸேட்ஜி பக்கா பெரிய மனிதன் என்று கண்டுகொண்டேன். அ வ ரு க் கு சமயத்துக்கு நான் சகாயமாக இருந்த ஒரு சின்ன சம்பவத்தில் அவர் என்னைத் தன் சகோதரனாகவே வரித்துவிட்டார். ஆனால் கோமதிக்கு நான் உதவி செய்ய வேண்டும். - என் புத்தி போன வழி இப்படித்தான். ஸேட்டின் ஸ்ேஃபிலிருந்து நகையை ப்படியேனும் துக்கிவிட வேண்டும். நானும் சமயம் பார்த்து என் வேலையிலிருந்து கழன்று கொள்ள வேண்டும். தாராளமான இடைக்காலம் விட்டு, என் சேமிப்புகளி லிருந்து ரூ. 5000-திரட்டி கோமதியிடம் கொடுத்து ஸ்ேட் டிடம் தன் கடனை அடைக்கச் செய்ய வேண்டும். பணம் திரும்பியதும் நகையையும் திருப்பவேண்டியது தானே. லேட் லேஃபில் தேடுவார் கானோம். திகைப் பார். தேடுவார். தினறுவார். இப்படிக் கொஞ்ச காலம் கழித்தாலும் கோமதிக்கு ஜவாப் சொல்வியாகனுமே! ஒன்று தகையைத் திருப்ப வேண்டும். அல்லது அதற்குரிய விலையைக் கொடுத்தாகணும். இடையில் சிக்கல்கள் இருக் கின்றன. என்ன இருந்தாலும் கடைசியில் நடக்க வேண்டியது இதுதான். அப்படி லேட் கொடுத்தபின், கோமதியிடம் முன் பணமாக நான் கொடுத்ததை அவளிட மிருந்து வசூல் பண்ணிக் கொள்வேன். இன்னமும் நாள் கழித்து, ரொம்ப நாள் கழித்து, கோமதியின் நகையை அவளிடம் சேர்க்க வேண்டும். நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. நகை எப்படி என் கைக்கு வந்தது? கோமதிக்குத் தெரியக்கூடாது. கோமதி